Advertisement

ஷமி மீது குற்றப்பத்திரிகை * உலக கோப்பை தொடருக்கு சிக்கல்

கோல்கட்டா: இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது ஜாமினில் வெளிவர முடியாத இரு பிரிவுகளில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 29. இவரது மனைவி ஹசின் ஜஹான். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷமி மீது வரதட்சனை கொடுமை, பாலியல் தொல்லை புகார் கொடுக்க ஷமி மீது வழக்கு பதியப்பட்டது.

இவர் மீதான 'பிக்சிங்' புகார் குறித்து விசாரித்த இந்திய கிரிக்கெட் போர்டு, போதிய ஆதாரம் இல்லை என்று முடிவு செய்து, மீண்டும் ஒப்பந்த பட்டியலில் சேர்த்தது. சர்ச்சைகளில் இருந்து மீண்ட ஷமி சமீபத்திய போட்டிகளில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினார். வரும் உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் உறுதி என நம்பப்படுகிறது.

இதனிடையே கோல்கட்டா போலீசார், அலிபூர் கோர்ட்டில் ஜாமினில் வெளிவர முடியாத வகையில் குற்றப்பத்திரிகை பதிவு செய்தனர். ஜூன் 22ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனால் வரும் ஐ.பி.எல்., தொடர் மற்றும் உலக கோப்பை தொடரில் (மே 30 முதல் ஜூன் 14) ஷமி பங்கேற்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement