Advertisement

சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் பார்சிலோனா

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கு பார்சிலோனா அணி முன்னேறியது. இதன் 'ரவுண்டு-16' சுற்றுக்கான 2வது போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் லியான் அணியை வென்றது.

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடரின் 12வது சீசன் நடக்கிறது. இதன் 'ரவுண்டு-16' போட்டியில் பார்சிலோனா (ஸ்பெயின்), லியான் (பிரான்ஸ்) அணிகள் மோதின. இவ்விரு அணிகளுக்கு இடையில் பிரான்சில் நடந்த முதல் போட்டி 0-0 என, 'டிரா' ஆனது.

'ரவுண்டு-16' சுற்றுக்கான இரண்டாவது போட்டி ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்தது. இதில் அபாரமாக ஆடிய பார்சிலோனா அணி 5-1 என வென்றது. பார்சிலோனா அணிக்கு மெஸ்சி (17, 78வது நிமிடம்), பிலிப் கவுடினோ (31வது), ஜெரார்டு பிக் (81வது), டெம்பெலே (86வது) கோலடித்து கைகொடுத்தனர்.

இரண்டு போட்டிகளின் முடிவில் பார்சிலோனா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

லிவர்பூல் முன்னேற்றம்: மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் பேயர்ன் முனிக் (ஜெர்மனி), லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் மோதின. இங்கிலாந்தில் நடந்த முதல் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. ஜெர்மனியில் நடந்த 2வது போட்டியில் அசத்திய லிவர்பூல் அணி 3-1 என வென்றது.

இரண்டு போட்டிகளின் முடிவில் லிவர்பூல் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement