Advertisement

பி.சி.சி.ஐ.,க்கு புது அதிகாரி

புதுடில்லி: பி.சி.சி.ஐ.,யின் முதல் குறை தீர்க்கும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே. ஜெயின் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ளார்.

லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழுவை (சி.ஓ.ஏ.,) சுப்ரீம் கோர்ட் அமைத்தது. ஆனால், சி.ஓ.ஏ., மற்றும் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு இடையே மோதல் நீடிக்கிறது. இதற்கிடையே, 'டிவி' நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் சர்ச்சைக்குரிய முறையில் பேசியதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின், தடை நீக்கப்பட்டபோதும் விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி பல பிரச்னைகளை தீர்ப்பதற்காக, குறை தீர்க்கும் அதிகாரி தேவைப்பட்டார். இப்பொறுப்புக்காக மாநில சங்கம் பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்ய வலியுறுத்தியது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் உதவியை சி.ஓ.ஏ., நாடியது.

இது குறித்து விசாரித்த நீதிபதிகள்,''குறை தீர்க்கும் அதிகாரி பதவிக்கு ஓய்வு பெற்ற ஆறு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய பட்டியல் எங்களிடம் இருந்தன. இதிலிருந்து நீதிபதி டி.கே.ஜெயின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பிரச்னைகள் குறித்து விசாரிப்பார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இடையே கருத்து ஒற்றுமை இல்லை என பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளன. இப்படிப்பட்ட விவகாரத்தை தங்களுக்குள் அவர்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பார்வைக்கு வருவது போல செயல்பட வேண்டாம்,'' என, தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மீதான பாலியல் புகாரை ஜெயின் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின், பாண்ட்யா, ராகுல் மீதான விசாரணையை துவக்குவார் எனத்தெரிகிறது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement