Advertisement

யூத் டெஸ்ட்: இந்தியா முன்னிலை

திருவனந்தபுரம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது யூத் டெஸ்ட் (19 வயது) போட்டியில், திவ்யான்ஷ் சக்சேனா சதம் கடந்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் இந்திய அணி 330 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதலாவது யூத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 197 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 95 ரன் எடுத்திருந்தது. திவ்யான்ஷ் சக்சேனா (44) அவுட்டாகாமல் இருந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி கேப்டன் சுராஜ் அஹுஜா (57) அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய திவ்யான்ஷ் சக்சேன் (122) சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். வைபவ் (11), மானவ் சுதார் (17), ஷோகீன் (20) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ராஜ்வர்தன் (41) ஆறுதல் தந்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 330 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

பின், 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஜோனாதன் பேர்டு (2), குமாலோ (0), கேப்டன் மாத்யூ மான்ட்கோமெரி (5) ஏமாற்றினர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 34 ரன் எடுத்து, 99 ரன் பின்தங்கி இருந்தது. அன்டில் மோக்ககேன் (16), போங்கா மககா (11) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அன்ஷுல் காம்போஜ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement