Advertisement

சென்னை அணி 'ஷாக்' * புரோ வாலிபாலில் ஏமாற்றம்

சென்னை: புரோ வாலிபால் தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி 2-3 என்ற கணக்கில் மும்பையிடம் வீழ்ந்தது.

புரோ வாலிபால் லீக் தொடரின் முதல் சீசன் தற்போது நடக்கிறது. 6 அணிகள் மோதும் இத்தொடரில் 'டாப்-4' அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதன் இரண்டாவது கட்ட போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடக்கின்றன.

நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ், மும்பை அணிகள் மோதின. முதல் செட்டை சென்னை அணி 14-15 என இழந்தது. அடுத்த செட்டில் எழுச்சி பெறும் என நம்பப்பட்ட நிலையில் இம்முறை 8-15 என மோசமாக கைவிட்டது. தொடர்ந்து மூன்றாவது செட்டையும் 10-15 என கோட்டை விட்டது.

நான்காவது செட்டில் 15-10 என அசத்திய சென்னை, ஐந்தாவது மற்றும் கடைசி செட்டையும் ( 15-10) கைப்பற்றியது. முடிவில் சென்னை அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. சென்னை அணி 4 போட்டியில் 1 வெற்றி 3 தோல்வி பெற்றது. இன்று ஆமதாபாத்தை வென்றால் அரையிறுதியை குறித்து யோசிக்கலாம்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement