Advertisement

ஹாக்கி அணி அறிவிப்பு

பெங்களூரு: மலேசிய தொடருக்கு தயாராகும் வகையில் 34 வீரர்கள் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டது.

மலேசியாவில் வரும் மார்ச் 23ல் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் துவங்குகிறது. இதற்குத் தயாராகும் வகையில் 34 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 2018 புவனேஷ்வரில் நடந்த உலக கோப்பை தொடரில் இடம் பெற்ற ஸ்ரீஜேஸ், மன்பிரீத் சிங் உள்ளிட்ட 18 பேரும் அப்படியே சேர்க்கப்பட்டனர்.

தற்போது பயிற்சியாளர் இல்லாத நிலையில் வீரர்களுக்கான பயிற்சி முகாம் நாளை பெங்களூருவில் துவங்குகிறது. வரும் மார்ச் 18 வரை என ஒரு மாதம் நடக்கும். இதுகுறித்து ஹாக்கி இந்தியா உயர் செயல்திறன் இயக்குனர் டேவிட் ஜான் கூறுகையில்,'' இந்த 34 வீரர்களில் இருந்து மலேசிய தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement