Advertisement

உலக கோப்பை தொடரில் தோனி * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு

புதுடில்லி: ''உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் நான்கு மாதத்திற்கும் குறைவான நாட்கள் உள்ள நிலையில் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் யார் என்பது குறித்து ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாக,'' தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் கோப்பை என அடுத்தடுத்து இந்தியா அசத்தி வருகிறது. உலக கோப்பை தொடர் (வரும் மே 30, லண்டன்) துவங்க இன்னும் நான்கு மாதத்திற்கும் குறைவான நாட்கள் உள்ள நிலையில் இந்திய அணி குறித்து தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் கூறியது:

இந்திய அணியின் சமீபத்திய வெற்றிகளை பார்க்கும் போது உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறப்போகும் 15 வீரர்கள் ஏறக்குறைய முடிவாகி விட்டனர் என நம்புகிறேன். இதில் ஒரு சிலர் வேண்டுமானால் மாற்றப்படலாம்.

பேட்டிங்கில் 'மிடில் ஆர்டரில்' சற்று குழப்பம் இருந்தது. அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி என யாருடைய பெயரையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும், தற்போது இந்த பிரச்னையும் தீர்ந்துள்ளதாக நினைக்கிறேன்.

இதேபோல கடந்த ஆண்டில் தோனி குறித்து பெரும் விவாதம் எழுந்தது. சமீபத்திய தொடர்களில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இவர், இதற்கு சரியான பதிலடி கொடுத்தார். இது தான் நாம் பார்த்த தோனி, இதைத் தான் அவரிடம் எதிர்பார்த்தோம். அடுத்து வரும் ஐ.பி.எல்., உட்பட 14 முதல் 16 போட்டிகளிலும் தோனி, தனது துணிச்சலான ஆட்டத்தை தொடரும் பட்சத்தில் உலக கோப்பை தொடரில் தோனி அணியின் முக்கிய வீரராக இருப்பார்.

இவ்வாறு பிரசாத் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement