Advertisement

டிண்டா தலையை தாக்கிய பந்து

கோல்கட்டா: பயிற்சி போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து தாக்கியதில் வேகப்பந்து வீச்சாளர் டிண்டா தலையில் பலமாக தாக்கியது.

இந்தியாவில் சையது முஸ்தாக் அலி உள்ளூர் 'டுவென்டி-20' தொடர் வரும் பிப். 21ல் துவங்குகிறது. இதற்குத் தயாராக பெங்கால் அணியின் விளையாடிய பயிற்சி போட்டி கோல்கட்டாவில் நடந்தது. பிரேந்தர் விவேக் சிங் பேட்டிங் செய்த போது, வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா பந்து வீசினார்.

அப்போது பிரேந்தர் அடித்த பந்து டிண்டா முன் தலையில் பலமாக தாக்கியது. உடனடியாக கீழே சரிந்தார் டிண்டா. பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவருக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'சி.டி.,' ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

இதில் காயத்தின் தன்மை பெரியளவு இல்லை எனத் தெரியவந்தது. இருப்பினும் டிண்டா இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement