Advertisement

ராம்குமார் ராமநாதன் வெற்றி

நியூயார்க்: நியூயார்க் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்திய வீரர் ரார்குமார் ராமநாதன் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவில், நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றுக்கான முதல் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் ராய் ஸ்மித் மோதினர். முதல் செட்டை 4-6 என இழந்த ராம்குமார், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-2 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 6-4 என வென்றார்.

முடிவில் ராம்குமார் ராமநாதன் 4-6, 6-2, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement