Advertisement

பங்கஜ் அத்வானி சாம்பியன்

இந்துார்: சீனியர் ஸ்னுாக்கர் தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6-0 என, லட்சுமண் ரவாத்தை தோற்கடித்தார்.

இந்துாரில், 86வது சீனியர் ஸ்னுாக்கர் தேசிய சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, லட்சுமண் ரவாத் மோதினர். அபாரமாக ஆடிய பங்கஜ் அத்வானி 6-0 (70-36, 91-22, 66-06, 65-51, 77-49, 59-18) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இது, பங்கஜ் அத்வானி வென்ற 9வது தேசிய ஸ்னுாக்கர் பட்டம். தவிர இவர், இதுவரை 32 தேசிய பட்டம் (ஜூனியர் பிரிவில் 11 + பில்லியர்ட்ஸ் 9 + 'சிக்ஸ்-ரெட்' ஸ்னுாக்கர் 3 + ஸ்னுாக்கர் 9) வென்றுள்ளார். சர்வதேச அரங்கில் ஸ்னுாக்கர், பில்லியர்ட்ஸ் சேர்த்து இதுவரை 21 உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement