Advertisement

புரோ வாலிபால்: கோழிக்கோடு வெற்றி

கொச்சி: புரோ வாலிபால் லீக் போட்டியில் கோழிக்கோடு அணி 3-2 என, ஐதராபாத் அணியை வென்றது.

இந்தியாவில், புரோ வாலிபால் லீக் (பி.வி.எல்.,) தொடரின் முதலாவது சீசன் நடக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கோழிக்கோடு, ஐதராபாத் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய கோழிக்கோடு அணி 3-2 (15-11, 15-11, 15-7, 12-15, 11-15) என்ற கணக்கில் தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் கொச்சி அணி (6 புள்ளி) உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement