Advertisement

பெண்கள் ஹாக்கி: இந்தியா 'ஏ' வெற்றி

கோராக்பூர்: பெண்களுக்கான இரண்டாவது ஹாக்கி போட்டியில் இந்தியா 'ஏ' அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் 'ஏ' அணியை வென்றது.

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் 'ஏ' ஹாக்கி அணி, நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 'ஏ' அணியுடன் விளையாடுகிறது. முதல் போட்டியில் பிரான்ஸ் 'ஏ' அணி வென்றது. இரண்டாவது போட்டி உ.பி., மாநிலம் கோராக்பூர் நகரில் நடந்தது.

இதில் அபாரமாக ஆடிய இந்தியா 'ஏ' அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா 'ஏ' அணி சார்பில் மரியானா குஜுர் (19வது நிமிடம்), லால்ரிம்சியாமி (30வது), மும்தாஜ் கான் (34வது) தலா ஒரு கோலடித்தனர். பிரான்ஸ் 'ஏ' அணிக்கு மிக்கேலா (14வது நிமிடம்), குஜே வான் போல்ஹுய்ஸ் (58வது) தலா ஒரு கோலடித்து ஆறுதல் தந்தனர்.

இதனையடுத்து தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி லக்னோவில் பிப். 12ல் நடக்கவுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement