Advertisement

தோனி '300'

தோனி தனது 300வது 'டுவென்டி-20' போட்டியில் களமிறங்கினார். இதன் மூலம், அதிக 'டுவென்டி-20' போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா (298) உள்ளார். சர்வதேச அளவில் இந்த இலக்கை எட்டிய வெஸ்ட் இண்டீசின் கெய்ல், டுவைன் பிராவோ உள்ளிட்டோருடன் தோனி இணைந்தார்.

தேசியக்கொடிக்கு மரியாதை

தோனி கீப்பிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென ரசிகர் ஒருவர் மூவர்ணக்கொடியுடன் உள்ளே வந்தார். பின், தோனி காலில் விழுந்து தனது அன்பை வெளிப்படுத்தினார். ரசிகர் குனிந்ததால் மூவர்ணக்கொடியும் மைதானத்தில் விழுவது போல இருந்தது. உடனடியாக, சுதாரித்த தோனி மூவர்ணக்கொடியை கையில் எடுத்துக்கொண்டார். இந்த 'வீடியோவை' கண்ட ரசிகர்கள் தோனியின் நாட்டுப்பற்றை பாராட்டினர்.

இது அதிகம்

நியூசிலாந்து அணி 212 ரன்கள் குவித்தது. இது, ஹாமில்டன் மைதானத்தில் நடந்த 'டுவென்டி-20' போட்டியில் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன், இதே நியூசிலாந்து அணி 202 ரன்கள் (எதிர்- ஜிம்பாப்வே, 2012) எடுத்ததே அதிகமாக இருந்தது.

குர்னால் சோகம்

இப்போட்டியில் 4 ஓவர் வீசிய குர்னால் பாண்ட்யா விக்கெட் வீழ்த்தாமல் 54 ரன் வழங்கினார். 'டுவென்டி-20' அரங்கில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுத்தந்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 4வது இடத்தை யூசுப் பதானுடன் பகிர்ந்து கொண்டார். முதல் மூன்று இடங்களில் முறையே சகால் (64 ரன், எதிர்- தென் ஆப்ரிக்கா, 2018), ஜோகிந்தர் சர்மா (57, எதிர்- இங்கிலாந்து, 2007), குர்னால் (55, எதிர்- ஆஸி., 2018) உள்ளனர்.

* நியூசிலாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக ரன் (54) விட்டுத்தந்த இந்திய பவுலரானார் குர்னால், இதற்கு முன், சிராஜ் ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் (2017) 53 ரன்கள் வழங்கி இருந்தார்.

ரன் வள்ளல் பாண்ட்யா

இத்தொடரில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 3 போட்டியில் 131 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் மூலம், இரு அணிகளுக்கு இடையே நடந்த 'டுவென்டி-20' தொடரில் அதிக ரன் வழங்கிய இந்திய பவுலரானார்.

92 சிக்சர்

இப்போட்டியில் நியூசிலாந்தின் மன்ரோ 5 சிக்சர் விளாசினார். இதனையடுத்து, சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் அதிக சிக்சர் (52 போட்டி, 92 சிக்சர்) அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் முறையே வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (103), நியூசிலாந்தின் கப்டில் (103), இந்தியாவின் ரோகித் (102) உள்ளனர்.

8 வெற்றி

'டுவென்டி-20' அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி அதிக தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை 11 போட்டியில் 8ல் வெற்றியை பறிகொடுத்துள்ளது. இதற்கு முன், இங்கிலாந்துக்கு எதிராக 7 தோல்வி அடைந்ததே அதிகம்.

2017க்குப்பின்...

கடந்த 2017 ஜூலையில் ஒரு போட்டி கொண்ட 'டுவென்டி-20' தொடரை இந்திய அணி இழந்தது. இதன்பின், இரு அணிகளுக்கு இடையிலான 9 தொடரையும் இழக்காமல் (7 வெற்றி, 2 'டிரா') வலம் வந்தது. தற்போதுதான் முதல் முறையாக 'டுவென்டி-20' தொடரை பறிகொடுத்துள்ளது.

பீல்டிங் மோசம்

இப்போட்டியில் இந்திய வீரர்களின் பீல்டிங் மோசமாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய 5வது ஓவரின் 3வது பந்தை மன்ரோ பவுண்டரிக்கு அடித்தார். எல்லைக்கோட்டிற்கு அருகே பந்தை விஜய் ஷங்கர் தடுக்க தவறினார். இதைப்போல, ஹர்திக் வீசிய 12.1வது பந்தை மன்ரோ அடித்தார். இவர் அடித்த எளிய 'கேட்ச்' வாய்ப்பை கலீல் கோட்டைவிட்டார். அப்போது 60 ரன் எடுத்திருந்த இவர் வாய்ப்பை பயன்படுத்தி 72 ரன் எட்டினார். இதைப்போல, ரிஷாப், கேப்டன் ரோகித்தும் 'பீல்டிங்கில்' ஏமாற்றினர்.

139 ரன்கள்

மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் டிம் செய்பெர்ட் முதலிடம் பிடித்தார். இவர், 3 போட்டியில், 139 ரன்கள் எடுத்தார். அடுத்த மூன்று இடங்களில் முறையே நியூசிலாந்தின் மன்ரோ (118 ரன்), இந்தியாவின் ரோகித் சர்மா (89), விஜய் ஷங்கர் (84) உள்ளனர்.

4 விக்கெட்

நியூசிலாந்தின் மிட்சல், சான்ட்னர், இந்தியாவின் குர்னால் பாண்ட்யா, கலீல் அகமது அதிகபட்சமாக தலா 4 விக்கெட் கைப்பற்றினர். இதில் குறைந்த ரன் வழங்கிய நியூசிலாந்தின் மிட்சல் (55 ரன்), சான்ட்னர் (72) முதலிரண்டு இடங்களை பிடித்தனர். அடுத்த இரண்டு இடங்களில் குர்னால் (119 ரன்), கலீல் (122) உள்ளனர்.





Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement