Advertisement

இந்திய பெண்கள் ஏமாற்றம்: கடைசி பந்தில் தோல்வி

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியின் கடைசி பந்தில் இந்திய பெண்கள் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வீழ்ந்த இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்துவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் நடந்தது. இந்திய அணியில் 'சீனியர்' வீராங்கனை மிதாலி ராஜ் இடம்பிடித்தார். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சோபியா அரை சதம்

நியூசிலாந்து அணிக்கு சுஜீ பேட்ஸ் (24), ஹன்னா (12) விரைவில் திரும்பினர். ராதா யாதவ் பந்தில் கேப்டன் சாட்டர்வொயிட் (31) ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய சோபியா டிவ்னே (72) அரை சதம் விளாசினார். தீப்தி சர்மா 'சுழலில்' கெஸ்பர்க் டக் அவுட்டானார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

மந்தனா விளாசல்

இந்திய அணிக்கு பிரியா பூனியா (1), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (21) ஜொலிக்கவில்லை. கேப்டன் ஹர்மன்பிரீத் 2 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மந்தனா பவுண்டரியாக விளாசினார். அரை சதம் கடந்த இவர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். மிதாலி, தீப்தி சர்மா இணைந்து வெற்றிக்கு போராடினர். கெஸ்பர்க் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மிதாலி (24), தீப்தி சர்மா (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதனையடுத்து இந்திய அணி 0-3 என தொடரை முழுமையாக இழந்தது.

.................





Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement