Advertisement

ஆஸி., திரும்பும் வார்னர்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வீரர் வார்னர் காயம் காரணமாக வங்கதேச பிரிமியர் லீக் தொடரிலிருந்து தாயகம் திரும்புகிறார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் (மார்ச், 2018) பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் தடை வரும் மார்ச் மாதத்துடன் முடிகிறது. இருவரும் வங்கதேச பிரிமியர் 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கின்றனர். சமீபத்தில், வலது முழங்கை காயம் காரணமாக (கோமிலா விக்டோரியன்ஸ் அணி) ஸ்மித் தாயகம் திரும்பினார். விரைவில் 'ஆப்பரேஷன்' செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், வார்னரும் காயம் காரணமாக வரும் 21ம் தேதி தாயகம் திரும்ப உள்ளார்.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில்,' வங்கதேச பிரிமியர் லீக் தொடரில் விளையாடி வரும் வார்னரின் வலது முழங்கை பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பரிசோதனை செய்ய, வரும் 21ம் தேதி தாயகம் திரும்ப உள்ளார். அதுவரை மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்பார்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement