Advertisement

சிக்கலில் பாண்ட்யா விவகாரம்

புதுடில்லி: பி.சி.சி.ஐ., மற்றும் சி.ஒ.ஏ., மோதலால் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் விவகாரம் தற்போதைக்கு முடியாது போலத் தெரிகிறது.

இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் 'டிவி' நிகழ்ச்சியில் பேசியது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் சிக்கலை கொண்டு வந்துள்ளது. இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட போதும், ஆஸ்திரேலிய தொடரிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். 2 போட்டி தடையுடன் பிரச்னையை முடித்துக்கொள்ள சி.ஒ.ஏ., உறுப்பினர் டயானா எடுல்ஜி விரும்பினார்.

ஆனால் இந்த முடிவை எடுப்பது யார் என்பதில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), கிரிக்கெட் நிர்வாகக்குழு (சி.ஒ.ஏ.,) இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வீரர்கள் மீதான விசாரணைக் குழு அமைப்பது தொடர்பாக சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என 10 மாநில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வினோத் மறுப்பு

பி.சி.சி.ஐ., மற்றும் சி.ஒ.ஏ., சார்பிலான குழு மட்டும் போதும் என சி.ஒ.ஏ., உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்தார். ஆனால்,' சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி வேறு எந்த குழுவிலும் இருக்கக் கூடாது,' என சி.ஒ.ஏ., தலைவர் வினோத் ராய் கூறிவிட்டார். தற்போது குழு அமைப்பது குறித்து சி.ஒ.ஏ., சார்பில் சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளனர். ஆனால் கோர்ட்டுக்கும், பி.சி.சி.ஐ.,க்கும் இடையிலான நீதிமன்ற உதவியாளர் கோபால் சுப்ரமணியம் சமீபத்தில் பதவி விலகினார். இவருக்கு மாற்றாக தேர்வு செய்யப்பட்ட நரசிம்மா, அடுத்த வாரம் தான் பொறுப்பேற்க உள்ளார். இதனால் பாண்ட்யா விவகாரம் குறித்த வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் பாண்ட்யா, ராகுல் பிரச்னை இப்போதைக்கு முடிவுக்கு வராது போலத் தெரிகிறது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement