Advertisement

புவனேஷ்வர் குமார் '100'

சிட்னி: ஒருநாள் அரங்கில் தனது 100வது விக்கெட் வீழ்த்தினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி சிட்னியில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது இடம் பெற்றனர்.

பின்ச் 'போல்டு'

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், அலெக்ஸ் கரே துவக்கம் தந்தனர். புவனேஷ்வர் வீசிய போட்டியின் 2.2வது ஓவரில் பின்ச் (6) போல்டானார். இது ஒருநாள் அரங்கில் புவனேஷ்வர் கைப்பற்றிய 100வது விக்கெட்டாக அமைந்தது. இவர் 96 வது போட்டியில் இந்த இலக்கை எட்டினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement