Advertisement

மார்க்ரம் அரை சதம்

ஜோகனஸ்பர்க்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்க துவக்க வீரர் மார்க்ரம் அரை சதம் கடந்தார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், ஏற்கனவே தென் ஆப்ரிக்கா 2-0 என தொடரை வென்றுவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று துவங்கியது.

இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா அணி தாமதமாக பந்துவீசியதால் 'ரெகுலர்' கேப்டன் டுபிளசிக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால், எல்கர் அணியை வழிநடத்தினார். 'டாஸ்' வென்ற இவர் பேட்டிங் தேர்வு செய்தார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் எல்கர் (5) ஒற்றை இலக்கில் திரும்பினார். மார்க்ரம், ஆம்லா ஜோடி சிறப்பாக விளையாடியது. அபாரமாக செயல்பட்ட மார்க்ரம் (90) அரை சதம் கடந்தார். ஆம்லா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். புரூய்ன் (49) அரை சத வாய்ப்பை இழந்தார். ஆமிர் 'வேகத்தில்' அறிமுக வீரர் ஜுபர் (41), பாவுமா (8) சிக்கினர். மற்றவர்கள் ஏமாற்ற தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அஸ்ராப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின், முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு மசோத் (2), அசார் அலி (0) சொதப்பினர். ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. இமாம் உல் ஹாக் (10) அவுட்டாகாமல் இருந்தார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement