Advertisement

பிரிமியர் பாட்மின்டன்: பைனலில் பெங்களூரு

பெங்களூரு: பிரிமியர் பாட்மின்டன் லீக் தொடரின் பைனலுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. அரையிறுதியில் 4-2 என, அவாதே வாரியர்ஸ் அணியை தோற்கடித்தது.

இந்தியாவில், பிரிமியர் பாட்மின்டன் லீக் (பி.பி.எல்.,) தொடரின் 4வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த முதல் அரையிறுதியில் அவாதே வாரியர்ஸ் (லக்னோ), பெங்களூரு ராப்டர்ஸ் அணிகள் மோதின. கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் லக்னோவின் அஷ்வினி பொன்னப்பா, மதியாஸ் கிறிஸ்டியன்சன் ஜோடி 2-0 (15-7, 15-10) என, பெங்களூருவின் லாரன் ஸ்மித், மார்கஸ் எல்லிஸ் ஜோடியை வீழ்த்தியது. 'டிரம்ப்' போட்டியில் வென்ற லக்னோ அணிக்கு 2 புள்ளி கிடைத்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் பெங்களூருவின் சாய் பிரனீத் 2-0 (15-9, 15-4) என, லக்னோவின் லீ டாங் கெயுனை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் பெங்களூருவின் ஸ்ரீகாந்த் 2-0 (15-7, 15-10) என, லக்னோ வீரர் சன் வான் ஹோவை தோற்கடித்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் பெங்களூருவின் முகமது அக்சன், ஹேந்திரா செடியவான் ஜோடி 2-0 (15-14, 15-9) என, லக்னோவின் யங் லீ, மதியாஸ் கிறிஸ்டியன்சன் ஜோடியை வென்றது. 'டிரம்ப்' போட்டியில் வென்ற பெங்களூரு அணிக்கு 2 புள்ளி வழங்கப்பட்டது.

இதனையடுத்து பெங்களூரு அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement