Advertisement

விடைபெறுகிறார் முர்ரே

மெல்போர்ன்: பிரிட்டன் டென்னிஸ் நட்சத்திரமான முர்ரே காயம் காரணமாக டென்னிசிலிருந்து ஓய்வு பெற உள்ளார். ஆஸ்திரேலிய ஓபன், தனது கடைசி தொடர் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே 31. முன்னாள் 'நம்பர்-1' வீரரான இவர் தற்போது தரவரிசையில் 230வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் (2012, 16) அடுத்தடுத்து தங்கம் வென்றவர். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஒற்றையரில் மூன்று முறை (விம்பிள்டன்- 2, யு.எஸ்., ஓபன் 1) கோப்பை கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் இடுப்புப்பகுதி காயத்திற்காக 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார்.

இதிலிருந்து மீண்ட இவர், ஜூன் மாதம் போட்டியில் பங்கேற்றார். இவர் எதிர்பார்த்தபடி உடல் ஒத்துழைக்கவில்லை.

சொந்த மண்ணில் நடந்த விம்பிள்டன் தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில், வரும் 14ம் தேதி மெல்போர்னில் துவங்கும் ஆஸ்திரேலிய ஓபன் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக உருக்கமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க பங்கேற்ற முர்ரே கூறுகையில்,'' கடந்த விம்பிள்டன் தொடருக்குப்பின், டென்னிசிலிருந்து ஓய்வு பெற எண்ணினேன். ஆனால், இது நினைத்தபடி நடக்கவில்லை.

அடுத்த ஐந்து மாதங்களுக்கு காயத்துடன் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இல்லை. காயத்தின் வலியை என்னால் தாங்க முடியவில்லை. இப்படிப்பட்ட உடல்நிலையில் பயிற்சியில் ஈடுபடுவோ அல்லது போட்டியில் பங்கேற்கவோ முடியாது.

இதிலிருந்து எப்போது மீண்டு வருவேன் என்றும் தெரியவில்லை. இதனால், டென்னிசிலிருந்து ஓய்வு பெற உள்ளேன். எதிர் வரும் ஆஸ்திரேலிய ஓபன், எனது கடைசி தொடராக அமையும்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement