Advertisement

உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட...

சிட்னி: சர்ச்சைக்குரிய முறையில் பேசிய ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உடனடியாக இந்தியா திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான ஹர்திக் பாண்ட்யா 25, லோகேஷ் ராகுல் 26, தனியார் 'டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இருவரும் தங்களின் அந்தரங்க வாழ்க்கை, பெண்கள் குறித்து இழிவான முறையில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதற்கு, பல தரப்பில் எதிர்ப்பு வந்ததால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நிர்வாகக்குழு நடவடிக்கையில் இறங்கியது. இருவருக்கும் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பியது. பாண்ட்யா மன்னிப்பு கேட்டபோதும் சோகம் தீரவில்லை. இரு வீரர்களும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். நேற்று, ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட இருவரையும் தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டது.

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' பாண்ட்யா, ராகுல் இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இவர்கள் மீதான விசாரணை முடியும் வரை பி.சி.சி.ஐ., ஐ.சி.சி., நடத்தும் போட்டிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.

இவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து இன்று புறப்படுகின்றனர். இந்தியா வந்தபின், விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நியூசிலாந்து ஒரு நாள் தொடரில் இருவரும் பங்கேற்பது சந்தேகம்தான்,'' என்றார்.

இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில்,'' பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து விசாரணை நடத்தி, தண்டனை விவரம் அறிவிக்கப்படும்,'' என்றார்.

கேப்டன் கோஹ்லி கூறுகையில்,''பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்கள் என்ற அடிப்படையில் பாண்ட்யா, ராகுல் கருத்தை ஏற்க முடியாது. இவர்களுக்கு ஆதரவு அளிக்க இயலாது. ஆல் - ரவுண்டர் இடத்தை ஜடேஜா பூர்த்தி செய்வார்,'' என்றார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • BALAKRISHNAN - CHENNAI,இந்தியா


    ரெண்டு பெரும் வேஸ்ட். விளையாடாமல் இருப்பதே சிறந்தது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement