Advertisement

ஆஸி., திரும்பிய ஸ்மித்

தாகா: வங்கதேச தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் காயம் காரணமாக ஆஸ்திரேலியா திரும்பினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 29. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால், 12 மாத தடையில் உள்ளார். தடைக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிகிறது. இதற்கிடையே, வங்கதேச பிரிமியர் 'டுவென்டி-20' லீக் தொடரில் (கோமிலா விக்டோரியன்ஸ்) பங்கேற்று வருகிறார். சில நாட்களுக்கு முன், இவரது முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக உடனடியாக இவர் ஆஸ்திரேலியா திரும்பி உள்ளார்.

கோமிலா அணி மானேஜர் சோகனுஸ்மான் கூறுகையில்,'' காயம் ஏற்பட்டதால் ஸ்மித் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். எம்.ஆர்.ஐ., 'ஸ்கேன்' எடுத்து, சிகிச்சைக்குப்பின் மீண்டும் வங்கதேச தொடரில் இணைவார்,'' என்றார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement