Advertisement

ஆசிய கால்பந்து: இந்தியா ஏமாற்றம்

அபுதாபி: ஆசிய கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 0-2 என்ற கணக்கில் யு.ஏ.இ., அணியிடம் வீழ்ந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஆண்களுக்கான 17வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'பிபா' உலக தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள இந்திய அணி, 79வது இடத்தில் உள்ள யு.ஏ.இ., அணியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் இந்தியாவின் அனிருத் தபா துாக்கி அடித்த பந்தை ஜிங்கன் தலையால் முட்டி கோலடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து 'கோல் போஸ்ட்டை' விட்டு விலகிச் சென்றது. பின் 12, 23வது நிமிடத்தில் இந்தியாவின் கோலடிக்கும் முயற்சியை யு.ஏ.இ., கோல்கீப்பர் கலித் ஈசா தடுத்தார்.

இந்நிலையில் 41வது நிமிடத்தில் யு.ஏ.இ., வீரர் கால்பன் முபாரக் அல் ஷாம்சி முதல் கோலடித்தார். இதற்கு பதிலடி தர, 43வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் செத்ரி அடித்த பந்து 'கோல் போஸ்ட்டை' உரசி வெளியே சென்றது. முதல் பாதி முடிவில் இந்தியா 0-1 என, பின்தங்கி இருந்தது.

இரண்டாவது பாதியின் 88வது நிமிடத்தில் யு.ஏ.இ., அணியின் அலி அகமது மாப்கவுத் ஒரு கோலடித்தார். கடைசி வரை போராடிய இந்திய அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 0-2 என, தோல்வியடைந்தது. இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் பக்ரைனை வரும் 14ல் சந்திக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement