Advertisement

பிரிமியர் பாட்மின்டன்: அரையிறுதியில் பெங்களூரு

பெங்களூரு: பிரிமியர் பாட்மின்டன் லீக் தொடரின் அரையிறுதிக்கு பெங்களூரு அணி முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 3-2 என்ற கணக்கில் சென்னையை வீழ்த்தியது. பெங்களூரு அணிக்கு சாய் பிரனீத், ஸ்ரீகாந்த் வெற்றி தேடித்தந்தனர். சென்னை அணியின் காஷ்யப் தோல்வியடைந்தார்.

இந்தியாவில் பிரிமியர் பாட்மின்டன் லீக் (பி.பி.எல்.,) தொடரின் 4வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு ராப்டர்ஸ், சென்னை ஸ்மாஷர்ஸ் அணிகள் மோதின. ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் சென்னையின் கிறிஸ் ஆட்காக், ஆர் சின் சுங் ஜோடி 2-1 (14-15, 15-9, 15-11) என, பெங்களூருவின் ஹெந்திரா செடியவான், முகமது ஆக்சன் ஜோடியை வென்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் பெங்களூருவின் சாய் பிரனீத் 2-0 (15-11, 15-12) என, சென்னையின் காஷ்யப்பை தோற்கடித்தார். 'டிரம்ப்' போட்டியில் தோல்வியடைந்த சென்னை அணிக்கு ஒரு புள்ளி குறைக்கப்பட்டது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது போட்டியில் பெங்களூருவின் ஸ்ரீகாந்த் 2-0 (15-10, 15-10) என, சென்னையின் வெய் பெங் சோங்கை தோற்கடித்தார். 'டிரம்ப்' போட்டியில் வென்ற பெங்களூரு அணிக்கு 2 புள்ளி வழங்கப்பட்டது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சென்னையின் சங் ஜி ஹியுன் 2-1 (15-10, 14-15, 15-10) என, பெங்களூருவின் தி டிராங் வுவை வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் பெங்களூருவின் மார்கஸ் எல்லிஸ், லாரன் ஸ்மித் ஜோடி 1-2 (8-15, 15-12, 4-15) என, சென்னையின் கிறிஸ், கேப்ரியல் ஆட்காக் ஜோடியிடம் வீழ்ந்தது.

முடிவில் பெங்களூரு அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அரையிறுதியில் யார்

லீக் சுற்று முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த அவாதே வாரியர்ஸ் (25 புள்ளி), ஐதராபாத் ஹன்டர்ஸ் (24), பெங்களூரு ராப்டர்ஸ் (21), மும்பை ராக்கெட்ஸ் (19) அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. பெங்களூருவில் நடக்கும் முதல் அரையிறுதியில் (ஜன. 11) அவாதே வாரியர்ஸ் (லக்னோ), பெங்களூரு ராப்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் (ஜன. 12) ஐதராபாத், மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் 13ல் பெங்களூருவில் நடக்கும் பைனலில் மோதும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement