Advertisement

டேபிள் டென்னிஸ்: அர்ச்சனா சாம்பியன்

கட்டாக்: தேசிய டேபிள் டென்னிஸ்பெண்கள் ஒற்றையரில் கர்நாடகாவின் அர்ச்சனா காமத், தங்கம் கைப்பற்றினார்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 80வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் 'நம்பர்-1' வீராங்கனை மணிகா பத்ராவை வீழ்த்தியவர் கர்நாடகாவின் அர்ச்சனா காமத் 18.

பைனலில் மேற்கு வங்கத்தின் கிரித்விகா சின்ஹாவை சந்தித்தார். முதல் செட்டை 12-10 என போராடி வென்ற அர்ச்சனா, அடுத்த செட்டை 6-11 என இழந்தார். 3, 4வது செட்டில் பின்தங்கி இருந்த போதும் 11-9, 12-10 என போராடி வென்றார். 5வது செட் (7-11) கைநழுவிய போதும், அடுத்த செட்டை 11-3 என கைப்பற்றினார்.

முடிவில் அர்ச்சனா 12-10, 6-11, 11-9, 12-10, 7-11, 11-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக 'சீனியர்' பிரிவில் சாம்பியன் கோப்பை வென்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement