Advertisement

முரளி விஜய் சதம்: எசக்ஸ் அணி வெற்றி

நாட்டிங்காம்: நாட்டிங்காம்ஷயர் அணிக்கு எதிரான 'கவுன்டி' போட்டியின் 2வது இன்னிங்சில் தமிழக வீரர் முரளி விஜய் சதமடித்து கைகொடுக்க, எசக்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில், உள்ளூர் 'கவுன்டி' சாம்பியன்ஷிப் 'டிவிசன்-1' தொடர் நடக்கிறது. நாட்டிங்காமில் நடந்த போட்டியில் எசக்ஸ், நாட்டிங்காம்ஷயர் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் நாட்டிங்காம்ஷயர் 177, எசக்ஸ் 233 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நாட்டிங்காம்ஷயர் 337 ரன்கள் எடுத்தது. பின், 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய எசக்ஸ் அணிக்கு முரளி விஜய் (100) சதமடித்து கைகொடுத்தார்.

இரண்டாவது இன்னிங்சில் எசக்ஸ் அணி 2 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாம் வெஸ்லே (110) அவுட்டாகாமல் இருந்தார்.

'கவுன்டி' போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய முரளி விஜய், முதல் இன்னிங்சில் 56 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் தென் ஆப்ரிக்காவின் ஆம்லாவுக்கு (181 ரன், எதிர்: கிளாமார்கன், 2009) பின், அறிமுக 'கவுன்டி' போட்டியில் சதமடித்த எசக்ஸ் அணி வீரரானார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Aarkay - Pondy,இந்தியா


    வாழ்த்துக்கள் விஜய் உங்களுக்கு எங்கு மரியாதை கிடைக்கிறதோ, அங்கு காசு பணம் குறைவாக இருந்தாலும் செயலாற்றுங்கள் அடுத்த IPL தொடரிலும் base price-ஐ குறைத்துக்கொண்டு உங்களை மதிக்கும் அணிக்காக ஆடுங்கள். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள் தமிழனுக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement