Advertisement

கற்றுக் கொள்வாரா கேப்டன் கோஹ்லி: கவாஸ்கர் 'அட்வைஸ்'

மும்பை: ''போட்டிகளின் போது எந்த இடத்தில் பீல்டிங் நிறுத்த வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ப பவுலிங்கில் மாற்றம் செய்வது குறித்தும் கோஹ்லி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் 'அட்வைஸ்' செய்துள்ளார்.

கோஹ்லி டெஸ்ட் அணி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஆசிய கண்டத்துக்கு வெளியே நடந்த இரண்டு தொடர்களிலும் இந்தியா 1-2 (தென் ஆப்ரிக்கா), 1-4 (இங்கிலாந்து) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதில் பேட்டிங்கில் 286, 593 ரன்கள் குவித்த கோஹ்லி, இரு தொடர்களில் 'நம்பர்-1' வீரராக வலம் வந்தார்.

ஆனால் கேப்டனாக இவர் சொதப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், 69, கூறியது:

கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்ற போது போதிய அனுபவம் இல்லாமல் இருந்தார். தற்போது சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது.

ஏனெனில் சமீபத்திய தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் பீல்டிங் நிறுத்தம் மற்றும் பவுலிங்கில் கோஹ்லி செய்த மாற்றங்கள் பெரியளவில் வெற்றி தேடித்தரவில்லை.

அனுபவம் போதாது: ஏனெனில் இந்திய ஆடுகளங்களில் விக்கெட்டுகள் விரைவாக சரிந்து விடும். இதனால் சிறந்த 'பார்ட்னர்ஷிப்பை' பிரிப்பது எப்படி என்ற அனுபவம் கோஹ்லிக்கு இல்லாமல் இருந்தது. அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தக் குறையை சரி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

தவிர 'டெயிலெண்டர்களை' அதிக ரன்கள் சேர்க்க அனுமதித்து வெற்றியை எதிரணி பறித்துச் சென்று விடாமல் பார்த்துக் கொள்வதும் மிக முக்கியம்.

மாற்றம் தேவை: அதேநேரம் அணியில் பெரியளவில் மாற்றம் செய்யத் தேவையில்லை. இது தன்னம்பிக்கை மற்றும் கட்டமைப்பை பாதித்து விடும். ஆனால் எந்த இடத்தில் பலவீனாக இருக்கிறோம் என்பதை கண்டறிந்து அவற்றை சரி செய்ய வேண்டும். அணியின் துவக்கம் மற்றும் 'மிடில் ஆர்டரில்' எந்தெந்த வீரர்களை அனுப்புவது, 'ஆல் ரவுண்டர்' யார் என்பது போன்ற விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். ஆடுகளம் மற்றும் எதிரணிக்கு ஏற்பவும் முடிவு எடுக்க வேண்டும்.

நான்காவது டெஸ்டில் 464 ரன்கள் என்ற இலக்கை 'சேஸ்' செய்து வெற்றி பெறுவது கடினம் தான். இருப்பினும் இந்திய அணி 'டிரா' செய்யும் என நம்பினேன். துரதிருஷ்டவசமாக ராகுல், ரிஷாந் பன்ட் அவுட்டானதும் மற்றவர்கள் ஏமாற்றியதால் இந்தியா தோற்க நேரிட்டது.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

பவுலர்களுக்கு பாராட்டு

கவாஸ்கர் கூறுகையில்,'' இங்கிலாந்து தொடரில் ஐந்து டெஸ்டில் கிட்டத்தட்ட 100 விக்கெட்டுகளையும் இந்திய பவுலர்கள் வீழ்த்தி, தங்கள் வேலையை சரியாகச் செய்தனர். பேட்ஸ்மேன்கள் தான் கோஹ்லியுடன் இணைந்து ஜொலிக்கத் தவறிவிட்டனர். இதனால் தொடரின் முடிவு ஏமாற்றம் தந்தது,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • Joe Pushparaj - Tamilnadu,இந்தியா


  இந்த விஷயத்தில் கோஹ்லி அவர்கள் நம்மவர்கள் மீது டோனியை விட நல்ல நம்பிக்கை வைத்தவர் என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உள்ளது.. என்ன செய்வது சில சமயங்களில் அதையும் மீறி சில காரண காரியங்கள் வழியில் வந்து விடுகின்றன. அதே சமயம் துவக்கம் சரியில்லை என்று இப்போது சொல்பவர்கள் நடந்து முடிந்த தொடருக்கு முன் இடைவரிசை பின்னடைவுகள் பற்றியும் மனதில் இறுதி பேசியிருந்தால் நன்றாக இருக்கும். அவ்விஷயம் அணித்தலைவருக்கும் தெரிந்ததே என்று நம்புகிறோம்.

 • Kaliamoorthy - Chennai,இந்தியா


  என் கருத்துப்படி இந்தியா டெஸ்டில் மீண்டெழ இரு மாற்றங்கள் அவசியம் தேவை. ஒன்று பேட்ஸ்மேன்கள் அனைவர்க்கும் கடுமையான உடற்பயிற்சி தேவைக்கு. பிளேக்சிபிலிட்டி அதாவது இயல்பான வளைந்துகொடுக்கும் தன்மை இப்போது அறவே இல்லை. ரெண்டாவது ரஹானேவுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து விலக்கி வைக்க வேண்டும். அவருக்கு சுத்தமமா உடற்தகுதி இல்லை. அவர் உடற்தகுதியை இழந்துவிட்டார்.

 • Sivasankar Krishnan - Chennai,இந்தியா


  கற்றுக்கொள்ள வேண்டியது மக்கள் தான், அவர்கள் பணம்தான் இவர்களிடம் கோடிகளாக சேர்கிறது. எப்பொழுது தேவையோ அப்போ மட்டும் டிவியில் பாருங்கள். மிக அதிக பணம் புழங்கும் இடத்தில தானாக ஏமாற்றும் கூட்டம் வந்து விடும்.

 • R.Perumalraja - Chennai,இந்தியா


  தலைவனுக்கும் தளபதியிற்கும் வித்தியாசங்கள் உண்டு என்றாலும் , ஒத்து ஊதும் பயிற்சியாளரும் , உறுதுணை என்று தன்னை தானே விளம்பரப்படுத்துக்கொள்ளும் துணையும் எரியும் நெருப்பில் பெட்ரோல் விடுவதும் கூடுதல் சுமையே .....ஒரு தலைவன் எந்தந்த நெருக்கடிகளில் இருந்து மீளலாம் / தவிர்க்கலாம் என்று பட்டியலிட்டு அந்தந்த நெருக்கடிகளில் வலியே சென்று மாட்டுவது இன்றைய தலைவனின் முதிர்ச்சியற்ற முற்போக்கு சிந்தனை ...IPL தொடரில் தன்னை இழுவுபடுத்திய வீரர்களை இந்திய ஆட்டங்களில சேர்க்காமல் / சேர்த்தும் பழிவாங்குவது கண்டிப்பாக கோலியின் வேலையாக இருக்க முடியாது ...

 • Aarkay - Pondy,இந்தியா


  ரிடையர் ஆன்லைன் கருத்து கந்தசாமிகள் தங்கள் பிழைப்புக்காக போகிற‌ போக்கில் கருத்துக்களை அள்ளி தெளித்துவிட்டு செல்லாமல், தங்களுக்கு வேண்டப்பட்ட வீரர்களின் career development -ற்காக, campaign செய்வதைவிட்டு, நடுநிலையுடன் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும், அறிவுறுத்தலையும் சொல்வது நலம் அது இயலாத பட்சத்தில், இதுவரை சம்பாதித்த பணத்தை, குடும்பத்துடன் ஆரோக்கியமான வழியில் செலவழித்தால் நல்லது.

 • rk - Pondy,இந்தியா


  ரிஷாப் பந்த் ஒரு insignificant இன்னிங்ஸ் தவிர, ஆடிய மற்ற 5 இன்னிங்ஸ்-களில் ஒற்றை இலக்க ஸ்கோர் மட்டுமே எடுத்ததை வசதியாய் மறந்துவிட்டு, தினேஷ் கார்த்திக்கின் career-க்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் north Indian மெண்டாலிட்டி... கவாஸ்கர், ஹர்பஜன் போன்ற ஓய்வு பெற்ற மேதாவிகள் தங்கள் சொந்தக்கருத்துகள் மூலம் தங்களுக்கு வேண்டியவர்களுக்காக campaign செய்வது.... ஒட்டு மொத்த டீமும் வழிந்த போது, கார்திக்கையும், முரளி விஜய் மட்டுமே தோற்றத்துக்கு காரணம் போல, அவர்களை கழட்டி விட்டது... எப்போது டீம் தோற்றாலும், தமிழ்நாட்டு வீரர்களை மட்டும் பலிகடா ஆக்குவது.... எப்படி உருப்படும் இந்திய கிரிக்கெட்??? வெங்கட்ராகவன் கேப்டன் ஆகா இருந்தபோது, வேண்டுமென்றே மயசமாய் விளையாடி, அவரை கேப்டன் பதவியிலிருந்து மட்டுமல்ல டீமை விட்டே தூக்கவைத்தவர்தான் இந்த கவாஸ்கர் இன்று உத்தமர் போல உளறுகிறார் இவர் எப்போதுமே, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக campaign செய்வதையே பிழைப்பை வைத்திருப்பவர் அணியையும், நிர்வாகத்தையும் சுதந்திரமாய் செயல்பட விடுங்கள் மேதாவி போல், உங்கள் கருத்துக்களை திணித்து, influence செய்யாதீர்கள்

 • s t rajan - chennai,இந்தியா


  ஆஸ்திரேலியா - வார்னர் மற்றும் ஸ்மித் போன்ற உலகத்தர வீரர்கள் இல்லாத சொத்தை டீம். இதில் ஜெயிப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. அந்த ஒன்றைணா டீமை செயித்து விட்டு மார் தட்டிக் கொள்வதில் எந்த பெருமையும் இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement