Advertisement

இளம் இந்தியா அபாரம்: ஆப்கன், நேபாளத்தை வீழ்த்தின

பாட்டியாலா: நான்கு அணிகள் மோதும் 19 வயது அணிகளுக்கான போட்டியில் இந்தியா 'ஏ', 'பி' அணிகள் ஆப்கானிஸ்தான், நேபாளத்தை வீழ்த்தின.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியா 'ஏ', 'பி', நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் என நான்கு அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் (19 வயது) நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 'பி', நேபாள அணிகள் மோதின.

முதலில் விளையாடிய இந்தியா 'பி' அணி, 49 ஓவரில் 161 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நேபாள அணி 41.3 ஓவரில் 121 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 'பி' அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் இந்தியா 'ஏ' அணி, ஆப்கானிஸ்தானை சந்தித்தது. இதில் பிரப்சிம்ரன் (104) சதம் அடிக்க இந்தியா 'ஏ' அணி 50 ஓவரில் 328 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவரில் 188 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 'ஏ' அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement