Advertisement

அஷ்வின் 'மேஜிக்' எங்கே: ஹர்பஜன் சிங் கேள்வி

புதுடில்லி: '' இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததற்கு சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சிறப்பாக செயல்படாதது தான் காரணம்,'' என ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி, இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. இத்தொடரின் முதல் டெஸ்டில் 7 விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், அடுத்த மூன்று டெஸ்டில் 4 விக்கெட்டுகள் (0, 1, 3) தான் வீழ்த்தினார்.

இதுகுறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியது:

நான்காவது டெஸ்ட் நடந்த சவுத்தாம்ப்டன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக கைகொடுத்தது. ஆடுகளம் சேதமான இடத்தில் பந்தை 'பிட்ச்' செய்தாலே போதும், விக்கெட்டுகளை வீழ்த்தி விடலாம் என்ற நிலை தான் இருந்தது. இதை மொயீன் அலி மிகச்சரியாக செய்து 9 விக்கெட்டுகள் சாய்த்தார். முதன் முறையாக நமது அணியை விட இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதை பார்த்தேன். இவருடன் ஒப்பிடும் போது அஷ்வின் சுமாராகத் தான் பவுலிங் செய்தார். இவரது பழைய மந்திர பந்து வீச்சு காணாமல் போனது. இதனால் தான் இந்திய அணி தோற்க நேரிட்டது.

காரணம் யார்

அஷ்வினால் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனதால் தான், இன்று 1-3 என இந்திய அணி தொடரில் பின் தங்கியுள்ளது. இவர் சிறந்த பவுலர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் சாதித்துள்ளார். ஆனால் போட்டியின் மூன்றாவது நாளில் கூட இவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்ற போது தான் விமர்சனம் எழுகிறது. ஐந்து விக்கெட்டுகள் என்றில்லை, குறைந்தது 2 அல்லது 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தால் கூட, இந்திய அணியின் இலக்கு 160 முதல் 170 வரை தான் இருந்திருக்கும். நான்காவது டெஸ்டில் 100 சதவீத உடற்தகுதியுடன் பங்கேற்று இருந்தால் எதிர்பார்த்த அளவுக்கு ஏன் பவுலிங் செய்யவில்லை. உண்மையில் அணி நிர்வாகம் இவரது காயத்தை எந்தளவுக்கு சீரியசாக எடுத்துக் கொண்டது எனத் தெரியவில்லை. இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

அடுத்த டெஸ்டில் சந்தேகம்

நாட்டிங்காம் டெஸ்டில் இடுப்பு வலி காரணமாக அவதிப்பட்டார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். இருப்பினும் சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இடம் பெற்ற இவர் 3 விக்கெட் சாய்த்தார். தவிர பேட்டிங்கின் போது மீண்டும் அஷ்வின் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் இவருக்குப் பதில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் ஜடேஜா சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. இதேபோல துவக்கத்தில் தொடர்ந்து ஏமாற்றும் லோகேஷ் ராகுலுக்குப் (4, 13, 8, 10, 23, 36, 19 மற்றும் 0 ரன்) பதில் 19 வயது உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு பட்டம் வென்று தந்த பிரித்வி ஷா, 18, அணியில் அறிமுகம் ஆக காத்திருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Ramasamynatarajan - Chennai,இந்தியா


    அஸ்வின் NO 1 பௌலர் என்பதில் சந்தேகம் இல்லை.ஹர்பஜன் இடத்தை அஸ்வின் பிடித்து பலவருடங்களாகி விட்டன.ஹர்பஜன் அஸ்வினை பற்றி சொன்னது சரியான logic இல்லை. இந்தியா batsmen ஸ்பின் விளையாடுவதில் தேர்ந்தவர்கள்.அவர்கள் மெயின்அலி யின் சூழலில் சிக்கியதற்கு காரணம் அவர்கள் எல்லாம் இன்னமும் 20/20 நினைப்பிலேயே விளையாடுகிறார்கள்.தவான் , ஹர்டிக், ராகுல்,ரிஷப பந்த், இவர்கள் டெஸ்ட் மேட்ச் காக விளையாடவில்லை.அதுவே காரணம். இங்கிலாந்து எத்தனை கேட்ச் கோட்டை விடுமோ அப்போதெல்லாம் நாம் வெற்றிபெற வாய்ப்பு. அஸ்வின் 100 % பிட் இல்லையென்று தெரிந்தும் ஒரே ஒரு சபினரை விளையாடியது captaincy / or தவறு. இங்கிலாந்து 2 ஸ்பின்னர் களை விளையாடியது. என்னை கேட்டால் நாம் 5 நாள் டெஸ்ட் விளையாட லாயக்கில்லை. ஏனென்றால் நின்று நிதானித்து விளையாட மனா பக்குவம் 20/20 டீமிர்க்கி இருக்காது. நம்மிடம் டெஸ்ட்டிற்காக தனி பிலேயேர்ஸ் இல்லை

  • samuel ravichand - vellore,இந்தியா


    இது டோடல் லா பேட்ஸ்மேன் மிஸ்ட்கே பஜ்ஜி பௌலர் டன் ஆஹ் குட் ஒர்க்

  • Vasanth - Chennai,இந்தியா


    ஹர்பஜன் ஒரு பொறாமை பிடித்தவர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement