Advertisement

கருணாரத்னே சதம்: மீண்டது இலங்கை

காலே: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கருணாரத்னே சதம் அடிக்க இலங்கை அணி சரிவிலிருந்து மீண்டது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று காலேயில் துவங்கியது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க அணியில் 6 மாதத்திற்குப்பின், வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன் இடம்பிடித்தார்.

ரபாடா அபாரம்

இலங்கை அணிக்கு குணதிலகா (26), தனஞ்செயா (11) விரைவில் ஆட்டமிழந்தனர். ஸ்டைன் பந்தில் குசால் மெண்டிஸ் (24) சிக்கினார். ரபாடா 'வேகத்தில்' மாத்யூஸ் (1), ரோஷன் சில்வா (0) திரும்பினர். இதனால், ஒரு கட்டத்தில் அணி 8 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து தடுமாறியது.

இருப்பினும், கருணாரத்னே பொறுப்புடன் விளையாடினார். எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர், சதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். மற்றவர்கள் ஏமாற்ற, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. கருணாரத்னே (158) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின், முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் 'டக்' அவுட்டானார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்து, 283 ரன்கள் பின்தங்கி இருந்தது. எல்கர் (4) அவுட்டாகாமல் இருந்தார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement