Advertisement

கபடி: சர்வீசஸ், ரயில்வே சாம்பியன்

மும்பை: பெடரேஷன் கோப்பை கபடி தொடரில், சர்வீசஸ் (ஆண்கள்), ரயில்வே (பெண்கள்) அணிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

மும்பையில், 3வது பெடரேஷன் கோப்பை கபடி தொடர் நடந்தது. இதன் ஆண்களுக்கான பைனலில் சர்வீசஸ், கர்நாடகா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய சர்வீசஸ் அணி, 28-25 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பெண்களுக்கான பைனலில் ரயில்வே, இமாச்சல பிரதேசம் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஒருகட்டத்தில் 25-25 என, சமநிலையில் இருந்தது. கடைசி நிமிடத்தில் இமாச்சல பிரதேச வீராங்கனையை, ரயில்வே அணியின் பிங்கி ராய் மடக்கி பிடித்தார். இதனையடுத்து ரயில்வே அணி, 26-25 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, கோப்பை வென்றது.

பைனலில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையுடன், ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement