தனுசு : சுக்கிரன், சூரியன், கேது நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வியாழன் அன்று வழிபட அல்லல் அகலும்.
மூலம் : உங்கள் ராசிநாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் இதற்கு முன்பிருந்த நிலையில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத நெருக்கடி தோன்றும் என்றாலும் அதை எல்லாம் லாபஸ்தான கேதுவால் சமாளிக்கும் சக்தி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி லாபமாகும்.
பூராடம் : ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசு வழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் விரும்பியதை அடைவீர். ஒரு சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர். பணம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும்.
உத்திராடம் 1 : நெருக்கடியான நிலை விலகி நன்மைகளைக் காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். குடும்ப பிரச்னைகள் தீரும் என்றாலும் ராசி நாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை.