விருச்சிகம் : ராகு, சுக்கிரன், புதன், சூரியன், செவ்வாய் நன்மையை வழங்குவர். திருத்தணி முருகனை வழிபட சிரமம் போகும்.
விசாகம் 4 : உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நினைத்தவற்றை சாதித்து முடிப்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். செல்வாக்கு உயரும். நிதிநிலை சீராகும். புதிய முயற்சி பலிதமாகும்.
அனுஷம் : உங்கள் ராசியாதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் இருந்த தடை விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். தொழிலை விருத்தி செய்யும் முயற்சி நிறைவேறும். லாபம் உண்டாகும்.
கேட்டை : ஆறாமிட ராகுவால் உங்கள் வாழ்க்கையில் உண்டான சங்கடம் விலகும். எதிரி உங்களை விட்டு விலகிச் செல்வர். லாப ஸ்தான சூரியன் செவ்வாயால் முயற்சிகளில் ஆதாய நிலை உண்டாகும். வருமானம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும்.