துலாம் : புதன் நன்மையை வழங்குவார். முன்னோரை வழிபட சங்கடம்விலகும்.
சித்திரை 3,4 : இதுவரை உங்களுக்கு நன்மைகளை வழங்கி வந்த குரு பகவான் வக்கிரம் அடைந்துள்ளதால் முயற்சி இழுபறியாகும். ஜென்ம கேதுவால் எதிர்பாராத சங்கடம் தோன்றும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் தாமதமாகும். கவனமாக செயல்படுவது நல்லது.
சுவாதி : லாபாதிபதி சூரியனும், குடும்பாதிபதி செவ்வாயும் மறைவு பெற்றிருப்பதால் செயல்களில் சிரமம் தோன்றும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் விரயாதிபதி புதன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து நன்மைகளை அடைவீர்.
விசாகம் 1,2,3 : புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார். அவர்களிடம் எச்சரிக்கை அவசியம். ஏழாமிட ராகுவால் எதிர்பாலினரால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் யாரிடமும் இக்காலத்தில் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு சிலர் தம்மிடம் உள்ள சொத்தை விற்பனை செய்வீர்.