சிம்மம் : சுக்கிரன், கேது நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு வாழ்வை வளமாக்கும்.
மகம் : தன ஸ்தானத்தில் ராசி நாதனுடன் பாக்கியாதிபதியும் இணைந்துள்ள நிலையில் உங்கள் எண்ணம் நிறைவேறும் அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நிதிநிலை உயரும். கேது பகவான் அருளால் உங்கள் செயல்கள் வெற்றியாகும்.
பூரம் : வாரத்தின் முற்பகுதியில் ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். ஒரு சில செயல்களை யோசிக்காமல் செய்து அதில் லாபம் அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.
உத்திரம் 1 : பனிரெண்டாமிட சுக்கிரனால் உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதை வாட்டிக் கொண்டிருந்த பிரச்சினைகள் விலகும்.
சந்திராஷ்டமம்: 28.9.2023 இரவு 9:09 மணி - 30.9.2023 இரவு 12:13 மணி