Load Image
Advertisement

கடகம்

கடகம் : சுக்கிரன், புதன், சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சுபிட்சம் ஏற்படும்.
புனர்பூசம் 4 : நெருக்கடி விலகி உங்கள் எண்ணம் நிறைவேறும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும். புதிய சொத்துகள் வாங்குவீர். தொழிலில் வருமானம் அதிகரிக்கும் நிதி நிலை உயரும். செவ்வாய் அன்று செயல்களில் கவனம் அவசியம்.

பூசம் : சனி பகவான் வக்கிரம் அடைந்துள்ளதால் நெருக்கடி விலகும். புதிய முயற்சி பலிதமாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வழக்கில் சாதக நிலை உண்டாகும். உங்கள் சமயோசித செயல்பாடுகளால் சங்கடம் நீங்கும். புதன் அன்று விழிப்புணர்வு அவசியம்.
ஆயில்யம் : மூன்றாமிட சூரியனும் செவ்வாயும் செல்வாக்கை உயர்துவர். முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். வியாழன் அன்று அமைதி காப்பது நல்லது.
சந்திராஷ்டமம் : 26.9.2023 மாலை 6:45 மணி - 8.7.2023 இரவு 9:08 மணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Advertisement