மீனம் : சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவர். துர்க்கையை வழிபட வாழ்க்கை வளமாகும்.
பூரட்டாதி 4 : உங்கள் ராசி நாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் குடும்பத்தில் நெருக்கடி உடல்நிலையில் சங்கடம் தோன்றும். அலுவலக பணியாளர்களுக்கு வேலை அதிகரிக்கும். செவ்வாய் அன்று திடீர் செலவு உண்டாகும்.
உத்திரட்டாதி : சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் நெருக்கடி நீங்கும். அஷ்டம கேதுவால் உடல் நிலையில் சங்கடம் தோன்றும். பெண்கள் தங்கள் கணவர் உடல் நிலையில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். ஏழாமிட செவ்வாயும் சூரியனும் எல்லாவற்றிலும் வேகத்தை அதிகரிப்பார்கள் என்பதால் நிதானம் அவசியம்.
ரேவதி : நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் கவனம் அவசியம். ராசி நாதன் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். பணி புரியும் இடத்தில் சில நெருக்கடி தோன்றும். மருத்துவ செலவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும்.