கும்பம் : ராகு நன்மைகளை வழங்குவார். அனுமனை வழிபட அல்லல் நீங்கும்.
அவிட்டம் 3,4 : மூன்றாமிட ராகுவால் முயற்சி முன்னேற்றம் அடையும். நெருக்கடி விலகி நன்மைகளைக் காண்பீர். பிரச்னைகளை சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். எட்டாமிடத்தில் செவ்வாயும் சூரியனும் மறைவதால் அரசு விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.
சதயம் : மூன்றாமிட ராகு செயல்களில் லாபத்தை உண்டாக்குவார். முயற்சி ஆதாயமாகும். எதிர்ப்பு விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொருளாதார நிலை உயரும். திங்கள் செவ்வாயில் செலவு அதிகரிக்கும். ஒரு சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.
பூரட்டாதி 1,2,3 : சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் முன்பிருந்த சங்கடம் நீங்கும். பயம் விலகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும், இழுபறியாக இருந்து வந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும் என்றாலும் சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடம் தோன்றும் என்பதால் கவனம் தேவை.