மகரம் : புதன் நன்மைகளை வழங்குவார். சனிக்கிழமையில் நவக்கிரகங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபட சங்கடம் போகும்.
உத்திராடம் 2,3,4 : உங்கள் ராசிநாதன் ராசிக்குள்ளாகவே வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் சிரமம் தோன்றும். பெரும்பாலான கிரகம் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சி இப்போது வேண்டாம். வெள்ளி அன்று செலவு அதிகரிக்கும்.
திருவோணம் : கடந்த வார சங்கடத்தில் இருந்து விடுபடுவீர். தசா புத்தி நன்றாக இருப்பவர்களுக்கு முயற்சி ஒவ்வொன்றாய் நிறைவேறும். தொழிலில் உண்டான தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். சனிக்கிழமை பண விவகாரத்தில் கவனம் தேவை.
அவிட்டம் 1,2 : நாலாமிட ராகு அலைச்சலை அதிகரிப்பார். ஏழாமிட சுக்கிரன் ஆசைகளை உண்டாக்குவார் வாழ்க்கையை தடுமாற வைப்பார் என்பதால் எதிர்பாலினரிடம் எச்சரிக்கை அவசியம். உழைப்பில் கவனம் செலுத்தினால் தேவைக்கேற்ற வருமானம் வரும். ஞாயிறு அன்று செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.