Load Image
Advertisement

மேஷம்

மேஷம் : சூரியன், செவ்வாய், சுக்கிரன் நன்மைகளை வழங்குவார்கள். சூரிய வழிபாடு சங்கடம் தீர்க்கும்
அசுவினி : கடந்த வார நெருக்கடி விலகும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செவ்வாயால் செயல் வெற்றியாகும். முயற்சி பலிதமாகும். எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர். புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினரால் சில சங்கடம் தோன்றும்.

பரணி : அரசு வழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். செலவிற்கேற்ற வருமானம் ஏற்படும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர்.
கார்த்திகை 1ம் பாதம் : வெள்ளிக்கிழமை சில சங்கடம் தோன்றும். சனிக்கிழமை முதல் முயற்சிகளில் வெற்றி காண்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.
சந்திராஷ்டமம் : 20.9.2023 காலை 7:04 மணி - 22.9.2023 மதியம் 12:34 மணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Advertisement