Advertisement

பிறந்த நாள் ஆண்டு பலன்கள்

வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
* உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள்.
* திட்டமிட்டு செயல்படுவீர்கள். வருமானம் உயரும்.
* ஏழைகளின் தேவையறிந்து தர்மம் செய்து நற்பெயர் காண்பீர்கள்.
* சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்திட உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* உடல்நிலை அதிருப்தி அளிக்கலாம். உடற்பயிற்சி அவசியம்.
* பெண்களுக்கு வேலைவாய்ப்பு, திருமணம் நடந்தேறும்.
* மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சாதனை படைப்பர்.
* தொழிலதிபர்கள் எதிர்பாராத வகையில் திடீர் ஆதாயம் காண்பர்.
* வியாபாரிகள் மிக அதிகமான லாபத்தை சம்பாதிப்பர்.
* பணியாளர்கள் வீடு, வாகன வகையில் கடனுதவி பெறுவர்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு நவீன உத்திகள் மூலம் மகசூல் அதிகரிக்கும்.
* அதிர்ஷ்ட எண்: 1,6,9
* அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, திங்கள்
* அதிர்ஷ்ட திசை: வடக்கு, கிழக்கு
* நிறம்: வெள்ளை, பச்சை,
* வணங்க வேண்டிய தெய்வம்: சிவன், சூரியன்

2, 11, 20, 29 B, K, R
* புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பர்.
* வருமானம் பலவழிகளில் வரும். பாக்கியும் வசூலாகும்.
* சுபநிகழ்ச்சிகளை மனம் போல நடத்தி மகிழ்வீர்கள்.
* மனமகிழ்ச்சியால் உடல்நிலை திருப்திகரமாக அமையும்.
* மனிதில் ஆன்மிகச் சிந்தனை நாளுக்குநாள் அதிகரிக்கும்.
* குழந்தைகள், மனைவியின் உடல்நிலை சீராக இருக்கும்.
* பெண்கள் ஆடை, ஆபரணச் சேர்க்கையால் மனம் மகிழ்வர்.
* மாணவர்கள் படிப்பில் விருப்பமுடன் ஈடுபட்டு சிறப்பர்.
* தொழிலதிபர்கள் தொழில்ரீதியாக பயணம் மேற்கொள்வர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவால் ஆதாயம் காண்பர்.
* பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி சலுகை பெறுவர்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு புதிய நிலம் வாங்கும் யோகம் உண்டு.
* அதிர்ஷ்ட எண்: 2,6,7
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், வெள்ளி
* அதிர்ஷ்ட திசை: மேற்கு, தெற்கு
* நிறம்: வெள்ளை, பச்சை, சிவப்பு
* வணங்க வேண்டிய தெய்வம்: லட்சுமி, அம்பிகை

3, 12, 21, 30 C, G, L, S
* அமைதியின் வடிவமான நீங்கள் பொறுமையுடன் செயல்படுங்கள்.
* ஆன்மிக பலம் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
* வருமானம் மிதமாக இருக்கும். சிக்கனமாக இருப்பது அவசியம்.
* சுபவிஷயங்களில் சுற்றத்தாரின் தலையீடு அதிகமிருக்கும் உஷார்.
* நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
* உடல்நிலை அதிருப்தியளித்தாலும் சமாளித்திடுவீர்கள்.
* பெண்கள் குடும்பநலனுக்காக அக்கறையுடன் பாடுபடுவர்.
* மாணவர்கள் கூடுதல் உழைப்பால் கல்வி வளர்ச்சி காண்பர்.
* தொழிலதிபர்கள் விடாமுயற்சியால் சீரான ஆதாயம் கிடைக்கும்.
* வியாபாரிகள் வாடிக்கையாளரின் தேவையறிந்து நிறைவேற்றுவர்.
* பணியாளர்கள் சக ஊழியர்களால் நெருக்கடிக்கு ஆளாக நேரிடலாம்.
* அரசியல்வாதிகள் விரும்பிய பதவி பெறுவதில் தாமதம் ஏற்படும்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் காண்பர்.
* அதிர்ஷ்ட எண்: 1,2,3
* அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, வியாழன்
* அதிர்ஷ்ட திசை: கிழக்கு, மேற்கு
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
* வணங்க வேண்டிய தெய்வம்: நடராஜர், அம்பிகை

4, 13, 22, 31 D, M, T
* பலரும் பாராட்டும் விதத்தில் செயல்பட்டு வருவீர்கள்
* பிரபலங்களின் அறிமுகத்தால் செல்வாக்கு காண்பீர்கள்.
* வருமானத்திற்கு குறைவிருக்காது. முயற்சி வெற்றி பெறும்.
* அடிக்கடி தொலைyµ பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புண்டு.
* நண்பர்களின் ஆதரவு எதிர்கால வளர்ச்சிக்கு துணைநிற்கும்.
* சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி சிறப்பாக நடத்துவீர்கள்.
* பெண்களுக்கு கணவர், குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும்.
* மாணவர்கள் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனைபுரிவர்.
* தொழிலதிபர்கள் அபரிமிதமான பணப்புழக்கத்துடன் இருப்பர்.
* வியாபாரிகள் நவீன உத்திமூலம் வியாபாரத்தைப் பெருக்குவர்.
* பணியாளர்கள் விரும்பிய பணி, இடமாற்றம் வந்து சேரும்.
* அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவுடன் முன்னேறுவர்.
* விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட விளைச்சல் கூடும்.
* அதிர்ஷ்ட எண்: 2,3,5
* அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, புதன்
* அதிர்ஷ்ட திசை: மேற்கு, வடக்கு
* நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள்
* வணங்க வேண்டிய தெய்வம்: கிருஷ்ணர், லட்சுமி

5, 14, 23 E, H, N, X
* அதிர்ஷ்டக்காற்று அலைபோல உங்கள் பக்கம் வீசும்.
* மனதில் நினைத்தது செயல்வடிவம் எடுக்கும் காலகட்டம்.
* வருமானம் பெருகுவதோடு சேமிப்பும் உயரும்.
* உறவினர்களின் ஆதரவுடன் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
* குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
* பழைய நண்பர்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்புண்டாகும்.
* உடலில் புத்துணர்வும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் நிலைக்கும்.
* பெண்கள் தாய்வழி உறவினர்களின் அன்பை பெறுவர்.
* மாணவர்கள் நன்றாக படித்து தரத்தேர்ச்சி காண்பர்.
* தொழிலதிபர்கள் சாதனை புரிவதோடு அதிக ஆதாயம் பெறுவர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவுடன் வளர்ச்சி காண்பர்.
* பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பிற்கு உரியவராவர்.
* அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகத் திகழும்.
* விவசாயிகள் தானியங்களுக்கு கூடுதல் விலை கிடைக்கப் பெறுவர்.
* அதிர்ஷ்ட எண்: 4,5,6
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், புதன்
* அதிர்ஷ்ட திசை: வடக்கு, கிழக்கு
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
* வணங்க வேண்டிய தெய்வம்: முருகன், சக்கரத்தாழ்வார்

6, 15, 24 U, V, W
* திட்டமிட்டு செயல்பட்டால் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
* வருமானம் உயரும். ஆடம்பரச் செலவை தவிர்ப்பது நல்லது.
* திருமண விஷயங்கள் நினைத்தது போல சிறப்பாக நடக்கும்.
* ஆரோக்கியம் மேம்படும். அலைச்சலால் அசதிக்கு ஆளாகலாம்.
* சகோதரர்களின் ஒத்துழைப்பு கண்டு மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.
* பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
* உறவினர் உதவுவதும், உதவி பெறுவதுமான நிலையிருக்கும்.
* பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையப்பெறுவர்.
* தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் அமோக லாபம் காண்பர்.
* வியாபாரிகள் புதுமையைப் புகுத்தி வாடிக்கையாளரைக் கவர்வர்.
* பணியாளர்கள் விரும்பிய சலுகை ஒவ்வொன்றாக கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் கடன்பிரச்னையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர்.
* அதிர்ஷ்ட எண்: 1,5,7
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், புதன்
* அதிர்ஷ்ட திசை: மேற்கு, வடக்கு
* நிறம்: வெள்ளை, பச்சை, ஊதா
* வணங்க வேண்டிய தெய்வம்: அம்பிகை, சனீஸ்வரர்


7, 16, 25 O, Z
* முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் அதிர்ஷ்டமான ஆண்டு இது.
* ஏற்றம் தரும் விதத்தில் பொருளாதாரம் பன்மடங்கு உயரும்.
* தடைபட்ட சுபவிஷயங்கள் இனி மளமளவென நிறைவேறும்.
* உடல் பலம் மேலோங்கும். மனதிலும் துணிவு பிறக்கும்.
* நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
* குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்த சிந்தனை மேலோங்கும்.
* பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர்.
* மாணவர்கள் ஆர்வமுடன் படித்து கல்வியில் வளர்ச்சியடைவர்.
* தொழிலதிபர்கள் அடிக்கடி நீண்டyµ பயணம் மேற்கொள்வர்.
* வியாபாரிகள் ஆதாயத்தை பெருக்கும் விதத்தில் செயல்படுவர்.
* பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர்.
* அரசியல்வாதிகள் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராவர்.
* விவசாயிகள் புதிய நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
* அதிர்ஷ்ட எண்: 1,5
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், வியாழன்
* அதிர்ஷ்ட திசை: தெற்கு, வடக்கு
* நிறம்: வெள்ளை, பச்சை, சிவப்பு
* வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை, பைரவர்

8, 17, 26 F, P
* பெருமையுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
* எதிர்பார்த்தது போல வருமானம் ஏறுமுகத்தில் இருக்கும்.
* தடையின்றி சுபநிகழ்ச்சிகள் இனிதாக நடந்தேறும்.
* உடற்பயிற்சி மூலம் உடல்பலத்தை அதிகரிப்பீர்கள்.
* உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும்.
* சகோதர, சகோதரிகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
* பெண்கள் குடும்ப வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்று மகிழ்வர்.
* தொழிலதிபர்கள் வளர்ச்சிப்பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவர்.
* வியாபாரிகள் விரிவாக்க முயற்சியில் கவனம் செலுத்துவர்.
* பணியாளர்கள் அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்கு காண்பர்.
* அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவையறிந்து உதவுவர்.
* விவசாயிகள் புதிய கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர்.
* அதிர்ஷ்ட எண்: 1,9
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், வெள்ளி
* அதிர்ஷ்ட திசை: கிழக்கு
* நிறம்: வெள்ளை, சிவப்பு
* வணங்க வேண்டிய தெய்வம்: வெங்கடாஜலபதி, வீரபத்திரர்

9, 18, 27
* சமூகத்தில் செல்வாக்கும் குடும்பத்தில் நிம்மதியும் பெருகும்.
* தனித்திறமை வெளிப்படும். வருமானம் பலவழிகளில் வரும்.
* பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைந்து புதுவாழ்வு பெறுவர்.
* வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
* சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி தானாகவே கிடைக்கும்.
* புதிய நண்பர்கள் பெரிய வெற்றிகளுக்கு பக்கபலமாக இருப்பர்.
* உடல்நிலை நன்றாக இருக்கும். மனநிலையும் சிறப்பாக அமையும்.
* தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவுடன் சிகரத்தை எட்டிப்பிடிப்பர்.
* வியாபாரிகள் சேமிக்கும் விதத்தில் கூடுதல் வருமானம் பெறுவர்.
* பணியாளர்கள் சக ஊழியர்களுடன் சகஜமாக பழகி மகிழ்வர்.
* அரசியல்வாதிகள் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர்.
* விவசாயிகள் அரசாங்க வகையில் சலுகை கிடைக்கப் பெறுவர்.

* அதிர்ஷ்ட எண்: 3,9
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள்,புதன்
* அதிர்ஷ்ட திசை: கிழக்கு, தெற்கு
* நிறம்: அரக்கு, பச்சை, சிவப்பு
* வணங்க வேண்டிய தெய்வம்: நரசிம்மர், மாரியம்மன்

Download for free from the Store »

Advertisement
 
Advertisement