Advertisement

பிறந்த நாள் பலன்கள்

வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
* வருமானம் திருப்தியளிக்கும்.
* உடலில் தெம்பும், மனதில் மகிழ்ச்சியும் நிலைக்கும்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவால் தொழிலை விரிவுபடுத்துவர்.
* விவசாயிகள் நவீன கருவிகளைத் திட்டமிட்டபடி வாங்குவர்.
* பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.
* மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.


2, 11, 20, 29 B, K, R
* பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் வரும்.
* உடல்நிலையில் கவனம் அவசியம்.
* வியாபாரிகள் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவர்.
* விவசாயிகள் எதிர்பார்த்ததை விட விளைச்சல் சற்று அதிகரிக்கும்.
* பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்பர்.
* மாணவர்கள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.


3, 12, 21, 30 C, g, L, S
* வருமானம் ஏறுமுகத்தில் இருக்கும்.
* பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
* வியாபாரிகள் வங்கி நிதியுதவியுடன் மூலதனத்தை அதிகப்படுத்துவர்.
* விவசாயிகள் புதிய நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
* பெண்கள் அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்குடன் இருப்பர்.
* மாணவர்கள் விடாமுயற்சியால் கல்வி வளர்ச்சி காண்பர்.


4, 13, 22, 31 D, M, T
* பல வழியிலும் வருமானம் அதிகரிக்கும்.
* உடற்பயிற்சியில் நாட்டம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
* வியாபாரிகள் அரசாங்க வகையில் ஆதாய பலன் கிடைக்கப் பெறுவர்.
* விவசாயிகள் விளைபொருளை நல்ல விலைக்கு விற்று மகிழ்வர்.
* பெண்கள் குடும்பத்தினரின் நலனுக்காகப் பாடுபடுவர்.
* மாணவர்கள் திட்டமிட்டுப் படிப்பர்.


5, 14, 23 E, H, N, X
* சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும்.
* உடல்நிலை ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது.
* வியாபாரிகள் சாதனை படைக்கும் எண்ணத்துடன் செயல்படுவர்.
* விவசாயிகள் நிலப்பிரச்னைக்கு சுமுகத்தீர்வு கிடைக்கப் பெறுவர்.
* பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து ஆலோசிப்பர்.
* மாணவர்கள் படித்து வளர்ச்சி அடைவர்.


6, 15, 24 U, V, W
* ஆடம்பரமாகச் செலவழிப்பீர்கள்.
* பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.
* வியாபாரிகள் சக வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் நல்ல வளர்ச்சி காண்பர்.
* பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் விருப்பமுடன் பங்கேற்பர்.
* மாணவர்கள் விடாமுயற்சியால் வெற்றி வாகை சூடுவர்.


7, 16, 25 O, Z
* வருமானம் உயரத் தொடங்கும்.
* உடலில் வலிமையும், மனதில் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
* வியாபாரிகள் புதிய வாடிக்கையாளரைக் கவரும் விதத்தில் செயல்படுவர்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் அடைவர்.
* பெண்களுக்கு சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
* மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படித்து முன்னேறுவர்.


8, 17, 26 F, P
* வருமானம் பன்மடங்கு உயரும்.
* பெற்றோர் உடல்நிலையில் அக்கறை கொள்வது நல்லது.
* வியாபாரிகள் வங்கி நிதியுதவியுடன் விரிவாக்கப் பணியில் ஈடுபடுவர்.
* விவசாயிகள் விளைபொருளை அதிக விலைக்கு விற்று மகிழ்வர்.
* பெண்கள் கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறுவர்.
* மாணவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர்.


9, 18, 27

* சேமிப்பு பலமடங்கு உயரும்.
* உடற்பயிற்சியால் உடல்நிலை சீராகும்.
* வியாபாரிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு ஆதாயத்தை இரட்டிப்பாக்குவர்.
* விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி மூலம் விளைச்சலைப் பெருக்குவர்.
* பெண்கள் புகுந்த வீட்டினர் மத்தியில் கவுரவத்துடன் திகழ்வர்.
* மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறப்பாகத் திகழ்வர்.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement