Advertisement

பிறந்த நாள் பலன்கள்

வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1,10,19,28- A,I,J,Q,Y
•எதிர்பாராத விதத்தில் பணமழை பொழியும்.
•உறவினர் வகையில் கருத்துவேறுபாடு மறையும்.
•வழக்கு விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
•எதிர்காலம் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
•பெற்றோரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
•ஆரோக்கியம் சீர்படும். மருத்துவச் செலவு இருக்காது.


2,11,20,29- B,K,R

•பொது வாழ்வில் தங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
•அரசியல் துறையினர் திடீர் முன்னேற்றம் காண்பர்.
•அரசாங்க உதவி பலகாலத்துக்குப் பிறகு கிடைக்கும்.
•அலுவலக விஷயங்களில் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள்.
•வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் வருமானம் பெருகும்.
•குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.


3,12,21,30 -C,G,L,S

•பொருளாதார மேம்பாட்டால் சந்தோஷம் காண்பீர்கள்.
•தொழிலில் புதிய முயற்சியில் ஈடுபட வாய்ப்புண்டு.
•அலுவலகத்தில் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவீர்கள்.
•நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாள்வது நல்லது.
•கலைத்துறையில் உள்ளவர்கள் மேம்பாடு அடைவீர்கள்.
•விரும்பிய இடம், பணி மாறுதலுக்கு வாய்ப்புண்டு.


4,13,22,31- D,M,T

•பெண்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும்.
•பங்குச் சந்தையில் கவனமாக முதலீடுகள் செய்யுங்கள்.
•பணப்புழக்கம் முன்பைவிட நன்றாக இருக்கும்.
•திருமணத்திற்குக் காத்திருப்போருக்கு நற்செய்தி உண்டு.
•பழைய பாக்கிகள் படிப்படியாக வசூலாகும்.
•கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.


5,14,23- E,H,N,X

•மகன் அல்லது மகளுக்குப் பொருத்தமான வரன் அமையும்.
•தள்ளிப்போன வம்பு வழக்குகளில் நல்ல முடிவு கிடைக்கும்.
•பெண்களால் குடும்பத்துக்கு அதிக நன்மை ஏற்படும்.
•கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம்.
•வங்கியில் கல்விக்கடனைக் கட்டி முடிக்க வாய்ப்புண்டாகும்.
•அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவால் நன்மை கிடைக்கும்.


6,15,24- U,V,W

•திட்டமிட்டபடி பொன், பொருள் வாங்குவீர்கள்.
•அந்தஸ்து மிக்கவர்களின் நட்பு உதவிகரமாக இருக்கும்.
•உடல்நலக்கோளாறு சரியாகும். மருத்துவச் செலவு குறையும்.
•பழைய நண்பர்களால் நட்பு வட்டம் விரிவடையும்.
•மனைவி / கணவன் வழி உறவினர்களால் நன்மை அதிகரிக்கும்.
•குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீ்ரகள்.

7,16,25- O,Z

•கல்வித்துறை பணியாளர்களுக்கு நன்மை அதிகரிக்கும்.
•ஏற்றுமதி, இறக்குமதித் துறையில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
•கலைத்துறையில் உள்ளவர்கள் விருது, பாராட்டு பெறுவீர்கள்.
•பணம் கொடுக்கல், வாங்கல் சிக்கலின்றி நடக்கும்.
•அலுவலகத்தில் சகபணியாளர்களை அனுசரிப்பது நல்லது.
•திட்டமிட்ட பயணங்கள் நல்லவிதமாக முடியும்.


8,17,26- F,P

•தாமதித்த வேலைளை விடாமுயற்சியுடன் முடிப்பீர்கள்.
•அரசாங்க அதிகாரிகளை அநாவசியமாகப் பகைக்க வேண்டாம்.
•அதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும்.
•மனைவிக்கு உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.
•கடந்த காலப் பணிகளுக்கு தற்போது பாராட்டு கிடைக்கும்.
•பயணத்தின் போது பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.


9,18,27

•எதையும் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது.
•நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும்.
•குடும்பத்தில் காணாமல் போன மகிழ்ச்சி மீண்டும் கிடைக்கும்.
•குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.
•சுப விஷயத்தில் எதிர்பார்த்த முடிவை நெருங்குவீர்கள்.
•சிலர் கண்பரிசோதனை செய்யும் சூழ்நிலை உருவாகலாம்.Advertisement
 
Advertisement