NRIஆல்பம்
06 Aug 2022
பஹ்ரைன் நாட்டின் சம்ஸ்குர்தி பஹ்ரைன் என்ற அமைப்பு இந்திய மாணவ, மாணவியருக்கு நடத்திய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய தூதர்பியூஸ் ஸ்ரிவாஸ்தவா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். அதனையடுத்து பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடந்தது
04 Aug 2022
ரியாத் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்தியாவின் 75வது சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மறைந்த பிரபல பாடகர் முஹம்மது ரஃபியின் 42 வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது
02 Aug 2022
அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் லைப்லைன் மருத்துவமனை கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை சங்க உறுப்பினர்களுக்கு நான்காவது முறையாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 350 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
31 Jul 2022
பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் (சமூக உதவி இயக்ககம்) சார்பாக கடற்கரை சுத்தம் செய்யும் பணி சல்மான் சிட்டி பீச்சில் நடந்தது. சுத்தப்படுத்தும் பணியை சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த காயி மீதிக் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
19 Jul 2022
குவைத் நாட்டின் சுவைக் துறைமுகத்துக்கு வந்த இந்திய கடற்படை ஐ.என்.எஸ். டெஜ் கப்பலுக்கு குவைத் கடற்படை மற்றும் இந்திய தூதரகத்தின் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குவைத் கடற்படை அதிகாரிகளுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் சந்தித்து பேசினர்
15 Jul 2022
சயின்ஸ் இந்தியா போரம் சார்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஸாஸ்திர பிரதிபா போட்டியில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஐக்கிய அமீரகத்தில் படிக்கும் மாணவி அபராஜிதா ஒன்பதாம் வகுப்பிற்கான ஸாஸ்திர பிரதிபா பட்டத்தை வென்றுள்ளார். இந்திய தூதரக அதிகாரி ராம்குமார் தங்கராஜ் விருது வழங்கினார்
15 Jul 2022
பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரில் உள்ள இந்திய பிரதிநிதி அலுவலகத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதி அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது எளிய முறை யோக பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்
14 Jul 2022
சௌதி அரேபியாவின் ஜெத்தா நகருக்கு இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். ஆதித்யா வந்தது. அந்த கப்பலில் உள்ள பல்வேறு வசதிகளை இந்திய பள்ளிக்கூட மாணவிகள் பார்வையிட்டு அதிசயித்தனர்
13 Jul 2022
ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜேரா நகரில் இந்தியன் சோஷியல் கிளப் சார்பில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. யோகா பயிற்சியாளர் எளிய முறையிலான பயிற்சிகளை செய்தார். அதனை பார்வையாளர்கள் செய்தனர்