Load Image
dinamalar telegram
Advertisement

NRIஆல்பம்

01 Aug 2022

பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான கோதை தாயார் ஆடிமாதம் பூர நக்ஷத்திரத்தில் ஶ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்தார். இந்த நன்நாளை பிட்ஸ்பர்க் நகர வைணவ பக்தர்கள் ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவிலில் வேதங்கள் முழங்க ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமாக கொண்டாடினர்

17 Jul 2022

அமெரிக்கா ராச்சஸ்டரின் புறநகரில் உள்ள ரஷ் டெம்பிள் என்று அழைக்கப்படும் ஶ்ரீவித்யா ஆலயத்தில் குரு பூர்ணிமா வழிபாடு மிகச்சிறப்பாக நடந்தேறியது

12 Jul 2022

பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேஷ்வரா கோவிலில் வைஷ்ணவி சுந்தரராமனின் பரதநாட்டிய அரங்கேற்றம் அவருடைய குரு, ஷோபிதா ரவி தலைமையில் சீரும் சிறப்புமாக அரங்கம் நிறைந்த பார்வையாளர் முன்னிலையில் ஆரவாரத்துடன் இனிதே நடந்தது

11 Jul 2022

அமெரிக்கா நியுயார்க் மாகாணம் ராச்செஸ்டரில் உள்ள இந்து கோயிலில் பிரதிஷ்டை யெ்யப்பட்டுள்ள கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன், பார்வதி சமேத பரமசிவன், சீதா தேவியுடன் இராமன், இலக்குமி, வெங்கிடாசலபதி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கான வாகனங்கள் முறைப்படி இணைக்கப்பட்டன

10 Jul 2022

பிட்ஸ்பர்க் ஶ்ரீ வெங்கடேஷ்வரா கோவிலில் .நந்தினி மண்டலிடம் பரத நாட்டியம் பயின்ற திவ்யாஶ்ரீ சரவணனின் பரதநாட்டிய அரங்கேற்றம், லதா சேகரன் தலைமையில் நடந்தது. அங்கயற்கண்ணி என்ற வர்ண்த்துக்கு 40 நிமிடம் நவரசங்களையும் வர்ணித்தவிதம் அனைவருடைய பாராட்டையும் பெற்றது

01 Jul 2022

அமெரிக்கா – வாஷிங்டன் மாநிலம் கிர்க்லேண்ட் ( சீட்டல் ) நகரில் ஸ்டார் கலைக்குழுவினரின் தமிழர் கலை விழாவில் தமிழினத்தின் பாரம்பரியக் கலைகளான பறை, ஒயிலாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், சதிராட்டம், வில்லுப் பாட்டு மெய்சிலிர்க்க வைத்தது

24 Jun 2022

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஜூன் 19ம் தேதியன்று, 'சுதா ரகுநாதன் தினம்' அறிவிக்கப்பட்டது. நியூயார்க் மேயர் எரிக் ஆடம் வெளியிட் இதற்கான பிரகடன ஆவணத்தை, பாடகி சுதா ரகுநாதனிடம், நியூயார்க் மேயர் அலுவலக வர்த்தகம், முதலீடு மற்றும் புதுமை துறைக்கான துணை கமிஷனர் திலீப் சவுகஹான் வழங்கினார்.

14 Jun 2022

அமெரிக்கா, நியூஜெர்சி, பிளமிங்டன் பகுதியில் அமைந்துள்ள மகா பெரியவா மணிமண்டபத்தில் மகா பெரியவா ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் அளித்த நான்கரை கிலோ குங்குமப்பூவால் மகா பெரியவாக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது

12 Jun 2022

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் நடைபெற்ற சிறுவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஓட்டப்பந்தயம், சாக்கு ரேஸ், நீளம் தாண்டுதல், ஸ்லோ சைக்கிளிங் போட்டி என பல போட்டிகளில் குழந்தைகள் திறமைகளை வெளிப்படுத்தினர்

11 Jun 2022

டெக்சாஸ் மாகாணம் டல்லாஸில் தமிழ்நாடு ஃபவுண்டேசன் நடத்திய பிரமாண்டமான 48 வது மாநாட்டின் போது தீபா கணேசன் குழுவினரின் அதீத கைவண்ணமான, பார்ப்பவர்களை விழி வியக்கிய தத்ரூபமாக 20 அடி உயரத்தில் நின்ற மாமல்லபுரம் சிற்பச் சுவர் அட்டையாய் அனைவர் மனதிலும் ஒட்டிக்கொண்டது!

 

Dinamalar iPaper

Advertisement