NRIஆல்பம்
15 Apr 2022
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்த தினத்தையொட்டி இந்திய தூதர் அஜித் வி குப்தே அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
12 Apr 2022
மும்பாஸா தமிழ் சங்கம் கொண்டாடிய தமிழ் புத்தாண்டு விழாவில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தலைவர் வின்சன்ட், தீபா குமரகுரு, கௌரி சங்கர், சுப்ரமணியன், நரசிம்ஹன், பரமேசுவரன், ராஜன்,கிருபா, சாந்தி, திவ்யா ஆனந்த் கௌரவிக்கப்பட்டனர்.
11 Apr 2022
உகாசேவா அமைப்பின் ரமலான் மாதம் உணவு பொருட்கள் வினியோகம் வழங்குதல் நிகழ்வு உகாண்டா தலைநகர் கம்பாவில் பதிமூன்றாவது ஆண்டாக நடைபெற்றது.
30 Mar 2022
ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நைஜீரியா லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய கோயிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் சிறப்பு பரிஹார ஹோமம் காலை 9 மணிக்கும், அபிஷேகம் காலை 10 மணிக்கும், தீபாராதனை சரியாக காலை 10.43 மணிக்கும் நடைபெற்றது.
21 Mar 2022
.நைஜீரியா, லேகோஸ் ஸ்ரீ சுப்ரமண்யர் கோயிலில் பங்குனி உத்திரத்திற்கு இரண்டு நாள் முன்பே பால் குடம் மற்றும் காவடி எடுக்க காப்பு கட்டி, இரண்டு வருடங்களுக்கு பிறகு பால்குடம், காவடி எடுத்து முருகனை வழிபட்ட திருப்தியில் பக்தர்கள் இருந்தார்கள்
21 Mar 2022
சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகப் பெருமானுக்கு அபிஷே கம் செய்வதற்காக பக்தர்கள் நேர்த்திக் கடனாக பால் குடம் ஏந்தி வந்தனர்.
05 Mar 2022
நைஜீரியா, லேகோஸ் நகரில் மஹா ஷிவாராத்திரியன்று, ஸ்ரீ லிங்கேஷ்வரர் ஏக முகம் அனேக ப்ரதிபலிப்பாக வலது பக்கம் சிவன், இடதில் பார்வதி தேவி, நடுவில் கணபதி மற்றும் மேலே சுப்பிரமணியன் என்ற மிக ப்ரத்யேகமான சிறப்பு அலங்காரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது
01 Mar 2022
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு மொசாம்பிக் இந்திய தூதரகம் நடத்திய கலைநிகழ்ச்சியில் மொசாம்பிக் தமிழ்ச் சங்க தலைவர் நடராஜன் சுப்பையாவின் மகன் நவீன் சுப்பையா, மகாகவி பாரதியார் வேடமிட்டு நமது தாய்மொழியின் சிறப்பை பறைசாற்றி, சான்றிதழ் பெற்றார்
22 Feb 2022
சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ விநாயகப் பெருமான் உள் வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.