dinamalar telegram
Advertisement

தமிழகம்

20 Feb 2020

பள்ளத்தாக்குகளில் வெள்ளைத் துகிலை விரித்தது போல துயில் கொள்ளும் வெண்பனி மேகங்கள், மலைமுகடுகளுடன் விளையாடிய உறவாடுகையில், வானில் வலம் வரும் சூரியன் 'வதைக்க' துவங்கிய பின்பே வெட்கப்பட்டு விலகிப் போகின்றன. இடம்: கொடைக்கானல் சூழல் சுற்றுலா மையம்

0

20 Feb 2020

வானவில்லின் ஏழு வண்ணம் காண இன்பமே.. :

விண்ணில் தோன்றும் வானவில் மண்ணில் தோன்றிய பேரழகு. இடம்: ராமநாதபுரம் செயற்கை இழை ஹாக்கிமைதானம்

0

20 Feb 2020

யாரை அடக்கி பரிசு பெற்றாலும், என்னை மடக்கிய பின் கொண்டு போ... என்கிறதோ திண்டுக்கல் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை.

0

20 Feb 2020

ஊட்டி அருகே அவலாஞ்சி அணையில், கோடை காலத்தை சமாளிக்கும் அளவிற்கு, 114 அடிவரை தண்ணீர் உள்ளது. மலைகள் சூழ்ந்த இந்த இயற்கை காட்சி, அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை மிகழ்ச்சி அடைய செய்கிறது.

0

20 Feb 2020

பொள்ளாச்சியில் வெயில் அதிகரித்து வருவதைஉணர்த்தும் வகையில், ரோடுகளில் கானல் நீர் காணப்படுகிறது. இடம்: வடக்கிபாளையம் ரோடு

0

20 Feb 2020

நீர் பறவைகள் அணிவகுப்பு :

கூட்டணி அமைத்து இரை தேடுவதற்காக தண்ணீரில் அணிவகுத்து செல்லும் நீர் பறவைகள். இடம்: உடுமலை ஒட்டுக்குளம்

0

20 Feb 2020

காந்தையாற்றில் கரணம் :

சுட்டெரிக்கும் சூரியன் அனல் கக்குகிறது. இந்த கொடும் வெயில் சூட்டை தணிக்க காந்தையாற்று நீரில் அந்தர் பல்டி அடித்து, குதூகல சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள். இடம்: சிறுமுகை அருகே காந்தை ஆற்றுப்பாலம்.

0
Share
 

Dinamalar iPaper

Advertisement