Advertisement

தமிழகம்: 16-ஏப்-2018

ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தனமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
திருவண்ணாமலை வேட்டவலம் கிராமத்தில் சம்பந்த விநாயகர் கோவிலில் லட்சதீப விழாவில் தீபம் ஏற்றிய பக்தர்கள்.
தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்வி குறித்த ஆலோசனை வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர் வித்யா கார்த்திக் மண்டபத்தில் நடந்தது. அதில் பேஷன் டெக்னலாஜி குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசினார்.
மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டிய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அருகில் அமைச்சர்கள்.
ஓய்வெடுக்கும் ஓடங்கள்...மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வருடத்திற்கு ஒருமுறை நாற்பத்தி ஐந்து நாட்களுக்கு மீன்பிடித் தடை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு முதல் தடை ஆரம்பமானதையடுத்து காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் ஓய்வெடுக்கும் ஓடங்கள்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் கோ சேவா சமிதி சார்பில் 108 நாட்டு பசுக்களுக்கு மகா கோ மாதா பூஜை நடந்தது இதில் பங்கேற்ற பக்தர்கள் .
 

Download for free from the Store »

Advertisement