Advertisement

தமிழகம்: 14-பிப்-2018

கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு மார்கெட்டில், குவிந்துள்ள தர்பூசணி பழங்கள்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசனுக்காக நடவு செய்த மலர்நாற்றுக்கள், பாதுகாக்க கோத்தகிரி மாலர் கொண்டு பாதுகாக்கப்படுகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை, பூக்கடை, பத்திரியன் தெரு பூக்கடைகளில் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து குவிக்கப்பட்டுள்ள வண்ண மலர்கள். கண்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது.
உதிக்கும் போதும் சரி மறையும் போதும் சரி ஒரே வண்ணத்தில் எண்ணத்தில் மனிதனுக்கும் பாடம் புகுட்டுகிறதோ. இடம் கோவை : சிந்தாமணிப்புதூர்
காதல் பறவையின் இந்த கொஞ்சல்கள் காதலர்களோடு செல்ல ஏங்குகிறது. இடம்: திருப்பூர், தாராபுரம் ரோடு.
பயன்பாட்டிற்கு வந்து 20 ஆண்டிற்கு மேலான கோவை வடகோவை மேம்பாலத்தில் பேட்ச் வர்க் பணிகள் நடந்து வருகிறது.
மக்கா சோளத்தை வெயிலில் உலர்த்தும் பணியில் ஈடுபட்ட விவசாயி. இடம்:திருப்பூர், அள்ளாலபுரம்.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்த மக்கள்.
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்கெட்டில், குவிந்துள்ள பல வண்ண ரோஜாக்கள்.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு மார்கெட்டில் குவிந்துள்ள சாத்துக்குடி பழங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
 

Download for free from the Store »

Advertisement