Advertisement

போட்டூன்

30 Sep 2017

மனிதர்களின் முதுகில் குதிரை : மனிதர்களை குதிரைதான் துாக்கணுமா? ஒரு மாறுதலாக இங்கே மனிதர்கள் குதிரையை துாக்கி செல்கின்றனர்.பொம்மை குதிரையை துாக்கி செல்வது திருமலை தேரில் பொருத்துவதற்காக..படம்: எல்.முருகராஜ் 1

25 Sep 2017

மண்ணும் மனமும் குளிருது.. : திருமலையில் பிரம்மோற்சவம் ஆரம்பித்த நாள் முதல் மழை பெய்துவருகிறது.வழக்கமாக இந்த திருவிழாவின் போது தண்ணீர் பிரச்னை காணப்படும் இப்போது பெய்துவரும் மழை காரணமாக தண்ணீர் பிரச்னை இல்லை பக்தர்கள் மனமும்,மண்ணும் குளிர்ந்து போயுள்ளது. படம்:எல்.முருகராஜ் 1

15 Sep 2017

டில்லியில் தமிழன் படும்பாடு... : விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்னைகளுக்காக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்திய லட்சணம். 0

07 Sep 2017

தண்ணிய பார்த்தால் குளிச்சுரணும்... : சென்னையில் இன்னமும் முழுமையாக தண்ணீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை.தினசரி குளிப்பது எனபது பலருக்கு இயலாத காரியமாக போய்க்கொண்டு இருக்கிறது.இதனால்தானோ என்னவோ ரயிலில் நீர் நிரப்பும் தண்ணீர் குழாயில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை பார்த்த உடன் ஒரு அப்பாவும் பிள்ளையும் குளித்தனர். 0

22 Aug 2017

போதைப்பொருள் உஷார்... : தமிழகத்தில் இளைஞர்கள்,மாணவர்களை குறிவைத்து விதவிதமான போதைப்பொருள்கள் ஊடுருவி வருகிறது.சென்னையில் பிடிபட்ட 100 கிலோ மாவா என்ற போதைப்பொருள் இது. டாஸ்மாக் அரக்கனையே ஒழிக்க முடியாத நிலையில் இப்படி புதுப்புது போதைப்பொருள் வருவது பகீரென்கிறது, பெற்றோர்களும் இளைஞர்களும் உஷராக இருக்கணும். 0

19 Aug 2017

அதிமுகவில் இது எந்த அணி? : திருச்சி வந்த முதல்வர் பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவின் சிறுவர் அணி?படம்:வீரமணிகண்டன்,திருச்சி. 0

19 Aug 2017

இப்ப சொல்லுங்க பஸ் யாருது... : சென்னை அரசு பஸ்சில் பயணம் செய்யும் இரு கல்லுாரி மாணவர்கள், யாருக்கு அதில் அதிகம் உரிமை என்பதில் தகராறு செய்து கொண்ட தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.இரு கல்லுாரி மாணவர்களையும் போலீசார் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் உட்காரவைத்தனர்.பின் இது பொதுமக்களுக்கான பஸ் இனிமேல் நாங்கள் எந்த தொந்திரவும் செய்யமாட்டோம் என எழுதிவாங்கிக்கொண்டு அனுப்பினர்.படம்:எஸ்.ரமேஷ் 0

16 Aug 2017

பெருங்கலவரத்தூர்... : நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு ஒட்டுமொத்தமாக சென்னை திரும்பியவர்களின் வாகனங்களால் பெருங்களத்தூர் போக்குவரத்து சிக்கலில் சிக்கி பெருங்கலவரத்துாரா கியது.காலை 6 மணிக்கு பெருங்களத்துார் வந்தவர்கள் 8 மணிக்கு பிறகே பெருங்களத்துாரை தாண்டினார்கள், அநேகமாக பலர் ஐந்தாவது நாளும் விடுமுறை எடுத்திருப்பர்.படம்:மாரியப்பன்,சென்னை. 0

16 Aug 2017

குனியாமல் கும்பிடு... : சென்னையில் சுதந்திரதினவிழாவிற்கு வந்த முதல்வர் பழனிச்சாமியை அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் குனியாமல் நிமிர்ந்து நின்றே கும்பிட்டு வரவேற்றனர். 0

12 Aug 2017

தாயின் மணிக்கொடி... : 70வது சுதந்திர தினவிழாவினை கொண்டாட நாடு முழுவீச்சில் தயராகிக்கொண்டு இருக்கிறது.காஷ்மீர் இளைஞர்கள் தேசியக்கொடியுடன் உலா வருகின்றனர். 0

09 Aug 2017

நானும் ஒத்திகை பார்த்துக்கிறேன்... : சென்னையில் நடந்த சுதந்திர தின ஒத்திகையின் போது...படம்:காயத்ரி. 0

02 Aug 2017

எங்கெங்கும் டெங்கு : கொசுவினால் பரவும் டெங்கு நோய் அதிகம் பரவுதை தடுக்க பொது இடங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட நிலவேம்பு. கஷாயம். 0

28 Jul 2017

முடியல மிஸ்டர் சூரியன்... : மே மாதத்தோடு உஷ்ணத்திற்கு ஓய்வு கொடுக்கவேண்டிய சூரியன், ஜூன் போய் ஜூலையும் முடியப்போகிறது இன்னும் அக்னி நட்சத்திர வெயில் போல உஷ்ணத்தைக் கொடுத்து கொண்டிருந்தால் மக்கள் எப்படித்தான் தாங்குவார்கள்.சென்னை அரசு விழாவிற்கு வந்த பொதுமக்கள் வெயில் தாங்காமல் தவித்தனர். 0

25 Jul 2017

கருத்து சொல்ல வாங்க.. : மின் கட்டணம் மாற்றி அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை சென்னையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்திற்கு நிறைய பேர் வராததால், அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது.படம்:சீனிவாசன் 0

21 Jul 2017

இதுதான் நாட்டு மாடு... : திருச்சி மக்கள் மன்றத்தின் சார்பில் நடந்த விதை திருவிழாவில் நாட்டு மாடுகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு இருந்த நாட்டு மாடுகளை இப்படி கண்காட்சியில் பார்க்கும் நிலை வந்துவிட்டதே என பலர் வேதனைப்பட்டனர். 0

18 Jul 2017

சிறையா?வீடா? : பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா பற்றி வெளியாகியுள்ள வீடியோவில் சிறைக்கைதிகளுக்கு உரிய சீருடை அணியாமல் சசிகலா சுடிதாருடனும், இளவரசி சேலையுடனும் இருக்கின்றனர். வீடியோ காட்சிகளை பார்த்தால் இவர்கள் சிறையில் தண்டனை அனுபவிப்பது போல தெரியவில்லையே? 0

12 Jul 2017

மழையாரே வருக. : சென்னை மக்களின் பொழுது போக்கே தண்ணீர் லாரிக்காக காத்திருப்பது என்று சொல்லும் வகையில் தண்ணீர் பிரச்னை கடுமையாகியிருக்கிறது.இந்த நிலையில் இப்போதுதான் மழை எட்டிப்பார்க்கிறது.எட்டிப்பார்க்கும் மழை கொட்டித்தீர்க்கட்டும், ஏரி குளங்கள் எல்லாம் நிரம்பட்டும், குடிநீர் பிரச்னை தீரட்டும். 0

03 Jul 2017

நாட்டு மக்கள் என்னாவார்கள்? : வரி விதிப்பை கண்டித்து சினிமா தியேட்டர்கள் இன்று மூடப்பட்டுள்ளன . திடுதிப்பென்று இப்படி செய்தால் இந்த நாட்டு மக்கள் என்னாவார்கள், குறிப்பாக இளைஞர்கள் சினிமா பார்க்காமல் திகைத்து போய்விட மாட்டார்களா? 0

29 Jun 2017

இது தேவைதானா? : ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் நோயாளிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சத்தம் எழுப்பாமல் செல்ல வேண்டும் என்பார்கள் இந்த நிலையில் சென்னை ஒமந்துாரர் அரசு ஆஸ்பத்திரி விழாவில் கலந்து கொள்ள வந்த முதல் அமைச்சரை வரவேற்கும் விதத்தில் சென்டைமேளம் முழங்க வரவேற்றனர் அடிச்ச அடியில் உள்ளே இருந்த நோயாளிகள் என்ன ஆனார்களோ? குறிப்பாக இதய நோயாளிகள்... 0

27 Jun 2017

பார்த்து எவ்வளவு நாளாச்சு... : ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதை பார்த்து எவ்வளவு நாளாச்சு.மழை காரணமாக வால்பாறை நடுமலை ஆற்றில் நீர் கரை புரண்டு ஒடுகிறது.தண்ணீர் இல்லாத சிரமத்தை ரொம்பவே அனுபவித்துவிட்டோம் ஆகவே இப்போதாவது இயற்கை தரும் இந்த நீரை சேமித்து நல்லபடியாக பயன்படுத்த கற்றுக்கொள்வோம். 0
Share
 

Advertisement